25 இடங்கள் கேட்கும் பாஜக.. “யார் யாருடன் கூட்டணி? இப்போ எதுக்கு..?” பட்டென சொன்ன அதிமுக எம்.எல்.ஏ!
மதுரை : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 25 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், "தேர்தல் நெருங்கும் நேரத்தில் இடங்கள் ஒதுக்குவது குறித்து பேசப்படும், அப்போது யார் யாருடன் கூட்டணி என்பது தெரியவரும்." எனக் கூறியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.
டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்று இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த சந்திப்பில் அண்ணாமலையுடனான எடப்பாடி பழனிசாமியின் மோதலுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அதிமுக -பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படியே அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் சமாதானமாகி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளனர். மேலும், கூட்டணியில் சீட் பகிர்வு பற்றியும் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாக தகவல் வெளியானது.
கூட்டணியில் சீட் ஷேரிங் : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருப்பதால் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதை முன்கூட்டியே கூற வேண்டும், கடந்த தேர்தலின் போது தொகுதி பங்கீட்டில் குழப்பங்கள் ஏற்பட்டது போல இந்த முறை நடக்கக்கூடாது என அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என அமித் ஷா கூறியதாகவும், பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் ஐடியா இருக்கிறது என அமித் ஷா நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி, அதிமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கூட்டணி அமைக்க இருப்பதாகவும், எனவே தற்போதே எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் எனக் கூற முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
25 சீட்? : தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை 25 இடங்களில் வெல்வோம் என கூறி வருகிறார். தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக தரப்போ, கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதைக் காரணம் காட்டி 5 தொகுதிகளோடு நிறுத்த முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இது பாஜகவினர் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக வாங்கும் இடத்தில் இல்லை.. அதிமுகவும் கொடுக்கும் இடத்தில் இல்லை.. மத்தியில் ஆளப்போவது மோடி. அதன் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் இருந்தாலே தமிழ்நாட்டுக்கு நல்லது. கூட்டணி என்று ஏற்படுமானால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தந்தாலே இல்லை எனில் தனியாகவே!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

யார் யாருடன் கூட்டணி ? : 25 சீட் வேண்டும் பாஜகவினர் கூறி வருவது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு + புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 சீட்களில் 25 சீட்களை பாஜகவிற்கு கொடுத்துவிட்டு நாங்கள் எனன் செய்வது என அதிமுகவினர் கொந்தளிக்கின்றனர். அதேசமயம் 10 சீட்களை கணக்குப் போட்டுத்தான் பாஜக 25 சீட் என்ற கோரிக்கையை கிளப்பியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தலைமைக் கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவுமான செல்லப்பா, "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 25 இடங்கள் தேவை என பாஜக குரல் எழுப்பி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இடங்கள் ஒதுக்குவது குறித்து பேசப்படும், அப்போது யார் யாருடன் கூட்டணி என்பது தெரிய வரும். தற்போது அது குறித்து எதுவும் பேசுவதற்கு எதுவும் இல்லை.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் எவரை பற்றியும் கவலை இல்லை, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைய வந்தால் ஏற்றுக் கொள்வோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் உண்மையான அதிமுக என நிர்வாகிகள் மற்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications