திருப்பரங்குன்றத்தில் பெரிய பரபரப்பே போகுது.. பாயிண்ட்டு வரட்டும்ன்னு.. காத்திருக்கும் அதிமுக, தவெக
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோவில் கார்த்திகை தீப விவகாரம் கிட்டத்தட்ட அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய இரு எதிர்க்கட்சிகளை அரசியல் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரும் போராட்டங்களுக்கு பாஜக பகிரங்க ஆதரவு அளித்தபோதும், இவ்விரு கட்சிகளும் இதுவரை அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
இப்பிரச்சனை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதில் துவங்கியது. அதிகாரிகள் அதை செயல்படுத்தாததால், இந்து-பாஜக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது காவல்துறை மோதல்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை குவிப்புக்கு வழிவகுத்தது. இச்சம்பவம் தற்போது மதுரை மாவட்டத்தில் முக்கிய அரசியல் விவாதமாகியுள்ளது.

அதிமுகவிற்கு திரிசங்கு நிலை
அதிமுகவுக்கு, எந்த நிலைப்பாடும் வாக்கு வங்கியை பாதிக்கும். அரசின் முடிவை ஆதரித்தால் இந்து அமைப்புகள் விமர்சிக்கும். திமுகவிற்கு ஆதரவு அழிப்பது போல ஆகிவிடும். அரசின் நிலைப்பாட்டை எதிர்த்தால் நீதிமன்ற உத்தரவையும், மத உணர்வுகளையும் மதிக்காதது போலத் தோன்றும். கட்சியின் மூத்த தலைவர்கள் பற்றி எக்ஸ் பக்கத்தில் கூட இதுவரை கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடும் முன் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனிப்பதாக கட்சி வட்டாரங்கள் என்கின்றன.
தவெகவிற்கும் திரிசங்கு நிலை
நடிகர் விஜய் தலைமையிலான தவெகவும் இதில் அமைதி காத்தே வருகிறது. அக்கட்சி மிக எச்சரிக்கையுடன் உள்ளது. இதுவரை மத விவகாரத்தில் பாஜகவோ திமுகவோ பக்கம் நிற்க விரும்பவில்லை. இதில் திமுகவின் முடிவை எதிர்த்தால் மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு வாக்காளர் ஆதரவை இழக்க நேரிடும், திமுகவை ஆதரிக்கவும் தவெக யோசிக்கும், அதிலும் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடக்கும் நேரத்தில் தவெக பாஜக தரப்பை எதிர்க்க யோசிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மௌனம் காப்பதே பாதுகாப்பான உத்தி என இரு கட்சிகளும் கருதுகின்றன. கோவில் தகராறு தொடர்ந்து விவாதப் பொருளாக இருப்பதால், பொதுமக்களின் மனநிலை தெளிவாகும் வரை காத்திருக்கவே அதிமுகவும் தவெகவும் முடிவெடுத்துள்ளன.
திருப்பரங்குன்றம் வழக்கு பின்னணி
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications