''அப்பாவுக்கு மறக்காம ஓட்டுப்போடுங்கோ''.. தேர்தல் பிரசாரத்தில் அசத்தும் ஆர்.பி.உதயகுமாரின் மகள்!
மதுரை: அதிமுக அரசு விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு சலுகைகள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
ஆர் பி உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மகள் பிரியதர்சினியும் வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு வேட்டை
தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார் பிரசாரம்
இந்த நிலையில் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கூடக்கோவில்,கொக்குளம் பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். செல்லும் வழியெங்கும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர். இந்த தேர்தல் பிரசாரத்தில் சுவாரசியமாக ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்சினியும் தந்தைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக நிறைவேற்றிய திட்டங்கள்
பிரசாரத்தின் போது அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் எங்கள் உயிர் போனாலும் உங்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வீடுவீடாக வந்து நேரடியாக பலமுறை உதவிகள் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்.அதிமுக அரசு விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

அமைச்சரின் மகள் பிரசாரம்
அதிமுக தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு சலுகைகள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். ஆர் பி உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மகள் பிரியதர்சினி பேசுகையில், "நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளையும் அமைச்சரும் எனது தந்தையுமான ஆர்.பி. உதயகுமார் உங்கள் வெற்றிச் சின்னம் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications