திருமங்கலம், சாத்தூர்.. 2 தொகுதிகளில் குடைச்சல் கொடுக்கும் சசிகலா! தப்பிப்பார்களா நயினார், உதயகுமார்
மதுரை: திருமங்கலம் மற்றும் சாத்தூர் தொகுதிகளில் சசிகலா தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள ஜீவிதா நாச்சியார் மற்றும் இசக்கி ராஜா ஆகிய இருவரும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு சவால் அளிப்பது தெரிய வந்துள்ளது. அதிமுக ஆதரவு வாக்குகள் பிரியும் பட்சத்தில் அங்கு திமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக பார்க்கப்படுகிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். இருந்தாலும் இந்த தேர்தலில் சாத்தூர் தொகுதிக்கு மாறி இருக்கிறார். முக்குலத்தோர் சமூக வாக்குகள் சாத்தூர் தொகுதியில் கணிசமாக இருந்தாலும், நயினார் நாகேந்திரன் மீது அந்த தொகுதி மக்களுக்கு நம்பிக்கை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் திமுக சார்பாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடற்கரை ராஜ் களத்தில் இருக்கிறார். அதேபோல் சசிகலா தரப்பில் இசக்கி ராஜா என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் முக்குலத்தோர் சமூக அமைப்பு வைத்திருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கு சவால் அளிப்பார் என்று கருதப்படுகிறது. அதேபோல் விஜய் தரப்பில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அஜித் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரியும் என்று கணக்கிடப்படுகிறது. இருந்தாலும் நயினார் நாகேந்திரனின் இரு மகன்களும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே சாத்தூர் தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கீழ் பணியாற்ற மிகப்பெரிய குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதனால் சசிகலா தரப்பு வேட்பாளர் பிரிக்கும் வாக்குகளை பொறுத்தே நயினாரின் வெற்றி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு சசிகலா செக் வைத்துள்ளார். அமமுகவில் மாநில இளைஞரணி பொறுப்பில் இருந்தவர் தான் ஜீவிதா நாச்சியார். வழக்கறிஞரான இவர், அமமுகவில் சீட் கிடைக்காது என்பதை அறிந்து சசிகலா பக்கம் தாவினார்.
ஏற்கனவே திமுக சார்பாக சேடப்பட்டி மணிமாறன் ஆர்பி உதயகுமாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார். தற்போது பிரச்சாரத்தில் ஜீவிதா நாச்சியாரும் சுழன்று வருவதால், திருமங்கலத்தில் ஆர்பி உதயகுமார் கரை சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் திமுகவின் களப்பணியை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என்றும் பார்க்கப்படுகிறது.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications