Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை விட்டு தெறித்து ஓடும் நிறுவனங்கள்.. உங்க துறையை கவனிங்க அமைச்சரே! ராஜாவை விமர்சித்த சரவணன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் குறித்து அவதூறாக கார்ட்டூன் வெளியிட்டதாக திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜாவுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொழில் தொடங்க ஏற்ற 17 மாநிலங்கள் பட்டியலில் கேரளா, ஆந்திரா, குஜராத் தெலுங்கானா, ராஜஸ்தான் புதுச்சேரி இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த பட்டியலில் தமிழகம் இல்லை எனவும், தமிழக தொழில்துறையை மோசமான இடத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் டிஆர்பி ராஜா, எடப்பாடி பழனிசாமியை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இன்றைக்கு அரசியலில் நாகரீகம் இல்லாமல் அமைச்சர் ராஜா பேசி வருகிறார். தனது துறையில் நடக்கும் அவலங்களைக் கூட அவரால் சரி செய்ய முடியாத தூர்பாக்கிய நிலையை தான் தொழில் துறையில் உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் துறையில் அமைச்சராக நியமனம் செய்த போது தொழில் அதிபர்களை நியமிக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் கப்பல் முதலாளி, சாராயா ஆலை முதலாளி, பல தொழில் துறை நடத்தி வரும் டிஆர்பி ராஜாவை ஸ்டாலின் அமைச்சராக நியமித்துள்ளார்.

DR saravanan AIADMK TRB Raja

எடப்பாடி பழனிசாமி

அது மட்டுமல்லாது இன்றைக்கு திமுகவின் குறைகளை சுட்டிக்காட்டும் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறுகளைப் பரப்புவற்கு, ஆபாசமாக கார்டூன் போடுவதற்கு கூடுதலாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவையும் அவருக்கு கொடுத்துள்ளார். இன்றைக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியை வைத்துக் கொண்டு 2 கோடி தொண்டர்கள் உயிர்நாடி, எட்டு கோடி தமிழர்களின் பாதுகாவலராக உள்ள எடப்பாடி பழனிசாமியை பற்றி, கேலிச்சித்திரத்தை அமைச்சர் ராஜா தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் டிஆர்பி ராஜா

இதற்காக கழக மருத்துவரணி சார்பில் அமைச்சர் ராஜாவை கடுமையாக கண்டிப்பது மட்டுமில்லாமல் இதற்கு துணை போகும் ஸ்டாலினையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஒரு கோடி பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர திராணியில்லை. இன்றைக்கு தமிழகத்தில் தொழில் துறை மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் அம்மா ஆட்சிக்காலத்தில் மட்டும் 30 சதவீதம் சிறு குறு நிறுவனங்கள் கூடுதலாக தமிழகத்தில் தொழில் தொடங்கின.

திமுக ஆட்சி

ஆனால் தற்போது இந்த திமுக ஆட்சியை மட்டும் 15 சகவீத சிறுகுறு நிறுவனங்கள் மூடிவிட்டன. குறிப்பாக 2023 ஆண்டில் 4550 சிறு குறு நிறுவனங்களும், 2024ஆம் ஆண்டு 5850 நிறுவனங்களும் மூடிவிட்டன. ஸ்டாலின் ஏற்கனவே 2022 ஆண்டில் துபாய் சென்ற 6,100 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தாகவும், அதனை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் சென்று 3,440 கோடியில் தொழில் முதலீட்டை ஈர்ந்தாகவும் சொன்னாரு ஸ்டாலின், ஆனால் இதில் ஒரு பைசா கூட வேலையை தொடங்கவில்லை.

இதுவரை ஸ்டாலின் உலக முதலீட்டார் மாநாட்டை நடத்தி பத்து லட்சம் கோடிக்கு தொழில் முதலீட்டை ஈர்த்து உள்ளோம் என்று கூறுகிறார் ஆனால் இதில் 10 சகவீதம் கூட தொழில் தொடங்கவில்லை என்பது தான் உண்மை தற்போது தமிழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த போட்ட நிறுவனங்கள் கூட வெளி மாநிலத்திற்கு சென்று விட்டன. இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் 2025 ஆண்டுக்கான உலக பொருளாதாரம் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பங்கேற்றன இதில் தமிழகம் பங்கேற்றுது

தமிழக தொழில்துறை

இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 15 .70 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து கையெழுத்து விட்டது .தெலுங்கானா மாநிலம் 1.75 லட்சம் கோடி முதலீட்டை கையெழுத்து விட்டது .அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முதலீட்டை ஈர்த்து கையெழுத்து விட்டது. ஆனால் தமிழகத்தைச் சார்ந்த குழுவினர் 50 முறை சந்திப்பு நடத்தி அதில் ஒரு பைசா கூட ஒப்பந்தத்தை கையெழுத்து இடவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.

மின் கட்டண உயர்வு

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் இருந்த சிறு குறு நிறுவனங்கள் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ஏறத்தாழ 2500 கோடி ரூபாயாகும்.
அது மட்டுமல்ல இன்றைக்கு தமிழகத்திலிருந்து ஆயிரம் பின்னலாடை கம்பெனிகள் கேரளாவுக்கு சென்று விட்டன. குறிப்பாக தென்கொரியா நாட்டைச் சேர்ந்த எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்று விட்டனர் இதன் மதிப்பு 5000 கோடி ரூபாயாகும்.

தமிழகம்

இன்றைக்கு தொழில் தொடங்க ஏற்ற 17 மாநிலங்கள் பட்டியலில் கேரளா, ஆந்திரா, குஜராத் தெலுங்கானா ராஜஸ்தான் புதுச்சேரி இடம் பெற்றுள்ளது ஆனால் இந்த பட்டியலில் தமிழகம் இல்லை என்பது தான் வேதனை ஏற்கனவே வேதாந்தா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு 2022 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று விட்டனர்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

கொரோனா காலத்தில் எளிய முறையில் கடனை திருப்பி செலுத்த வகையில் 15,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். அதேபோல பொது துறை நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருள்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் செய்தும் கொள்முதல் செய்யப்படும். இதில் ஒப்பந்த புள்ளிகளில் 10% சலுகைகள் அளிக்கப்படும் என்று கூறினார் எதையும் செய்யவில்லை

விமர்சனம்

இப்படி தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது. உங்கள் அவலங்களை மறைக்க தரம் தாழ்ந்து விமர்சித்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தொடர்ந்து விமர்சனங்களுக்கு நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+