மதுரையில் மேக்கப்புடன் ஃபோட்டோ ஷூட்..ஒன்னுமேயில்லை! மெட்ரோ என்னாச்சு? மு.க.ஸ்டாலினை கேட்கும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் மதுரைக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் இதுவரை மதுரைக்கு செய்தது என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, மதுரைக்கு அறிவித்த மெட்ரோ, வர்த்தக மையம் உள்ளிட்ட திட்டங்கள் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரையில் இன்று திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் மாநாடு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்கு கண்டனம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும், தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது, சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

mk stalin dmk aiadmk

முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சுமார் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோட் ஷோவிலும் முதலமைச்சர் பங்கேற்று மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், மதுரைக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் இதுவரை மதுரைக்கு செய்தது என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, மதுரைக்கு அறிவித்த மெட்ரோ, வர்த்தக மையம் உள்ளிட்ட திட்டங்கள் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்," பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத குப்பை மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே ஸ்டாலின் அரசின் சாதனை!

நீங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? போட்டித் தேர்வுகள் மையம் எங்கே? தொழில் வழித் தடம் எங்கே? வர்த்தக மையம் எங்கே? மதுரை மெட்ரோ எங்கே? மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா ? உங்கள் அப்பா பெயர் விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது?

பந்தல்குடி கால்வாயை திரை போட்டு மறைத்ததே வெட்கக்கேடான செயல். அதை விட, Damage Control என்ற பெயரில் பொம்மை முதல்வர் கையை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஷூட் வேடிக்கையின் உச்சம். போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா! இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர முதல்வர் ஸ்டாலின் கூச்சப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரா? போட்டோ ஷூட் என்றால் Full Make-up உடன் வந்திடுவார்." என கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+