மதுரை தெற்கு தொகுதி.. பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்.. கேப்பில் சம்பவம் செய்த செல்லூர் ராஜூ!
மதுரை: மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவில் மாநில நிர்வாகி மகாலட்சுமி மற்றும் ராம சீனிவாசன் இருவரும் மோதிக் கொள்ளும் சூழலில், அதிமுகவில் எஸ்எஸ் சரவணன் போட்டியிடக் கூடாது என்று செல்லூர் ராஜூவும் காய் நகர்த்தி வருகிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மதுரை தெற்கு தொகுதியை வைத்து பாஜக மற்றும் அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. லோக்சபா தேர்தலின் போது மதுரை தெற்கு தொகுதியில் அதிமுகவை விடவும் அதிக வாக்குகளை பாஜக கைப்பற்றியது. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

இதனால் சட்டசபைத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி உறுதி என்று பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கணித்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூக மக்களும், செளராஷ்டிரா சமூக மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதில் செளராஷ்டிரா சமூக மக்களிடையே பாஜகவின் ஆதரவு வலுத்து வருகிறது.
அண்மையில் மதுரையில் செளராஷ்டிரா சமூக மக்கள் தரப்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது செளராஷ்டிரா சமூகத்திற்கு யார் அதிக முக்கியத்துவம் தருகிறார்களோ, அவர்களுக்கே ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட நீண்ட காலமாக ராம சீனிவாசன் காய் நகர்த்தி வருகிறார்.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை தெற்கு தொகுதியில் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த மகாலட்சுமியும் தீவிரமாக தமிழக பாஜக தலைமையை நெருக்கி வருகிறார். ஆனால் கடந்த முறை மதிமுக வேட்பாளரான புதூர் பூமிநாதனிடம் தோல்வியடைந்த செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த எஸ்எஸ் சரவணனும் மீண்டும் சீட் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டு வருகிறார்.
எஸ்எஸ் சரவணன் தொடக்கம் முதலே ஆர்பி உதயகுமாரின் ஆதரவாளராக இருந்து வருகிறார். ஆர்பி உதயகுமார் மதுரை மாநகரில் எங்கு சென்றாலும் சரவணன் உடனிருப்பார். இதனால் மதுரை தெற்கு தொகுதி பாஜக வசம் தள்ளிவிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தீவிரமாக இருக்கிறார்.
மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுகவினர் பணியாற்றுவார்களா என்பதும் கேள்விக்குறி தான். ஏனென்றால் அதிமுக வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும், அங்கு எளிதாக வெல்ல முடியும். ஆனால் பாஜக வேட்பாளர் என்றால், அதிமுக நிர்வாகிகளின் அரசியலை கடப்பதற்கு பெரிய செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
-
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications