மதுரை வந்த ஓபிஎஸ்... “மாஸ்” வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் - அலைகடல்போல் ஆதரவாளர்கள் - செம சவுண்டு
மதுரை: சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
Recommended Video
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர் எடப்பாடி
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

வழக்கு விசாரணை
இருப்பினும் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அடுத்தடுத்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார்.

பிரதமர் மோடி
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்காத நிலையில், டெல்லி மேலிடம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தகைய சூழலில் கடந்த 28 ஆம் தேதி சென்னை பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.

சொந்த ஊர் நோக்கி
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்புக்கே அழைப்பு வந்ததாக செய்திகள் வெளியாகின. அதே நேரம் இரு தரப்பினரும் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு சென்றார்.

உற்சாக வரவேற்பு
இதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான தென் மாவட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், மலர் மாலை அணிவித்தும் ஆதரவு முழக்கங்களை எழுப்பியும் அவரை வரவேற்றார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications