மடப்புரம் அஜித்குமார் கொலை.. நிகிதாவை நெருக்கும் சிபிஐ.. மார்ச் 4ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் காவல் நிலைய கொலை வழக்கில் பொய் புகார் அளித்தது தொடர்பாக நிகிதா மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகைத் திருட்டு புகார் பொய் என்பதை சிபிஐ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவிருப்பது விவாதமாகி இருக்கிறது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டு புகாரில் பெயரில் அஜித்குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த விசாரணையின் போது காவல் துறை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதேபோல் விசாரணைக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனிடையே அஜித்குமார் மரண வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஜூலை மாதத்தில் இருந்தே சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே நிகிதா அளித்த நகைத் திருட்டு புகாரின் உண்மைத்தன்மையும் குறித்த கேள்விகளும் எழுந்தது.
இதனிடையே சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் நிகிதா அளித்த நகைத் திருட்டு புகார் பொய் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது என்றும், அதுதொடர்பாக 90 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து வருவதாகவும் கூறினர். இதனால் நீதிபதி, புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டிய சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நிகிதாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனால் பொய் புகார் அளித்த நிகிதா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே நிகிதாவிடம் சிபிஐ தங்களின் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவிட்டது. தற்போது நிகிதாவை நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் நிகிதா மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அஜித்குமார் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications