மாஜி விஜயபாஸ்கர் காளையா? சீறி வந்த வெள்ளை கொம்பன்... உற்று பார்த்த உதயநிதி.. கிளைமேக்சில் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: இன்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஜல்லிக்கட்டில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் கலந்து கொண்டன.

மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து உள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில் அதனை உற்சாகமாக வீரர்கள் பிடித்தது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

போட்டி

போட்டி

காலை 7.30 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்ட நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை அலங்காநல்லூரில் 1000 காளைகளும், 350 வீரர்களும் ஆட உள்ளனர். முதல் பாதி ஆட்டம் முடிய உள்ள நிலையில் கிட்டத்தட்ட 200 காளைகள் வரை இதுவரை களமிறக்கப்பட்டு உள்ளன. இந்த போட்டியில் வெல்லும் நபர்களுக்கு கார், பைக், தங்க செயின், தங்க மோதிரம் என்று சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த தங்க மோதிரமும் வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

இந்த ஜல்லிக்கட்டு தொடரின் ஒரு பகுதியாக நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் செவலக்கொம்பன் காளை கலந்து கொண்டது கவனம் பெற்றது. இந்த காளையை யாரும் அடக்க முடியவில்லை. வந்த வேகத்தில் இந்த காலை சீறிப்பாய்ந்து. அங்கு நின்று இருந்த வீரர்கள் யாராலும் காளையை பிடிக்க முடியவில்லை. நேற்று நடந்த போட்டியில் இதையடுத்து செவலக்கொம்பன் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பரிசும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர்

இதையடுத்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை கலந்து கொண்டது. அவரின் வெள்ளை கொம்பன் காளை இன்று களமிறக்கப்பட்டது. இந்த காளை களமிறக்கப்பட்டதும் அதை பிடிக்க சுற்றி வீரர்கள் நின்றனர். இந்த காளையை பிடிப்பவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காளையை பிடிப்பதற்காக சுற்றி வீரர்கள் சுழன்று சுழன்று வந்தனர். இந்த காளை வந்ததும்.. இது மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை என்று அறிவிக்கப்பட்டது.

 அமைச்சர்

அமைச்சர்

இதையடுத்து கேலரியில் இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று அதை பார்த்தார். வீரர்கள் யாராவது பிடிக்கிறார்களா என்று எழுந்து நின்று பார்த்தார். வீரர்கள் பிடிக்க வாகாக மாடும் நடு பகுதியில் நின்றது. அதனால் மாடு பிடிபடும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் வீரர்கள் அருகே வருவது தெரிந்ததும் மாடு சீறிப்பாய்ந்து அப்படியே நழுவி சென்றது. மாடு பாய்ந்து சென்ற வேகம் அங்கிருந்தவர்களை கவர்ந்தது. இதையடுத்து வெள்ளை கொம்பன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெள்ளை கொம்பன் வெற்றியை தொடர்ந்து மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த தங்க மோதிரத்தை பரிசாக அளிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+