கொம்புல பூவை சுத்தி.. அலங்காநல்லூரில் களத்தை அலறவிட்ட கட்டப்பா காளை.. உரிமையாளருக்கு கார் பரிசு

Subscribe to Oneindia Tamil

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலை தாண்டி வந்து களத்தில் நின்று விளையாடியது கட்டப்பா காளை. கொம்பில் பூவை சுற்றிக்கொண்டு வந்து 2 நிமிடம் வரைக்கும் நின்று விளையாடியதோடு.. தொட்டுப்பார் என்று வீரர்களை அலறவிட்ட கட்டப்பா காளை முதலிடம் பிடித்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்றைய தினம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதில் 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன.

Alanganallur Jallikattu: Melur Gunas bull Kattappa win First prize

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பான இறுதிச்சுற்றில் கார்த்தி - அபிசித்தர் ஆகிய இருவரும் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்தார்.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர். இந்த ஆண்டும் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கருப்பாயூரணி கார்த்திக்குக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

17 காளைகளை அடக்கி 2ஆம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு பைக் பரிசாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர் அபிசித்தர்.

பல காளைகள் வாடிவாசலை திறந்த உடன் பிடிபடாமல் ஓடி தங்கக்காசு பரிசாக பெற்றாலும் வாடிவாசலில் தயாராக இருந்த வீரர்களின் கைகளில் சிக்காமல் கொம்பு வச்ச சிங்கமாக சீறி நின்றது மேலூர் குணாவின் கட்டப்பா காளை. இரண்டு கொம்புகளிலும் மல்லிகைப்பூவை சுற்றி வந்த கட்டப்பா காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை அலறவிட்டது.

இரண்டு நிமிடம் வரைக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்தை விட்டு நகராமல் நின்று விளையாடியது. வீரர்கள் யாரும் நெருங்கக் கூட இல்லை. தொட்டுப்பார் என்று விளையாட்டு காட்டிய காளையை உரிமையாளர்கள் கயிறு போட்டு பிடிக்க நினைத்தும் போராட்டத்திற்குப் பிறகுதான் பிடிபட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக கட்டப்பா காளை தேர்வு செய்யப்பட்டது. மாட்டின் உரிமையாளர் குணாவிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+