Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைம் தந்த நீதிபதி.. உறுதியாக நின்ற அரசு! நிமிடத்திற்கு நிமிடம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் அங்கே தீபம் ஏற்றப்படாமல் போனதால் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். இதன் காரணமாக தற்போது அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கின் பின்னணி, நிமிடத்திற்க்கு நிமிடம் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலையிலுள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அக்கோயிலின் செயல் அலுவலர் வி. சந்திரசேகர், செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது. முக்கியமாக பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேரடியாக தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது இது தொடர்பாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட்ட உத்தரவில், தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், அங்கு தீபம் ஏற்றுவது தர்காவையோ முஸ்லிம் சமூகத்தையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறி, அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆட்சேபணைகளை நீதிபதி நிராகரித்தார்.

All you need to know about the Thhirupparankundram Deepam issue on the day of Karthigai

அறநிலையத்துறை தவறிவிட்டது

கோயில் நிர்வாகம், மலையில் உள்ள காலிப்பகுதிகளின் மீது தனது உரிமையைப் பாதுகாப்பதில் தவறிவிட்டது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 1923 ஆம் ஆண்டின் தீர்ப்பு யார், எதற்கு உரிமையாளர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அது மசூதி நிர்வாகிகளை கோவில் பகுதியை ஆக்கிரமிப்பதில் இருந்து தடுக்கவில்லை. எனவே, அதன் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க கோயில் நிர்வாகம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம், அங்கே தீபம் ஏற்றுவதில் தவறு இல்லை" என்று நீதிபதி கூறினார்.

நிமிடத்திற்கு நிமிடம் நடந்த நிகழ்வுகள்:

மாலை 5 மணி - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார். விசாரணை நடந்தது.

மாலை 5.20 மணி - வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றப்பட்டது. தீப தூணில் ஏற்றப்படவில்லை. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதம் வைத்தார்.

குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி வழக்கை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்

மாலை 6.10- தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படவில்லை

இரவு 7 மணி - திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

இரவு 7.15 மணி - தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். அங்கே போலீஸ் மீது தாக்குதல். பேரிகேட் உடைப்பு. பதற்றம்.

இரவு 7.40 மணி - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில்,
உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுபிறப்பித்தார் .

இரவு 7.45 - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போலீசார் உடன் தள்ளு முள்ளு செய்தனர். போலீசார் காயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தூக்கி எறியும் போது, காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது)

இரவு 7.45- போலீசாரின் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலை மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்பு படையினருடன் சென்று, இந்து அமைப்பினர் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன நூறாண்டு பாரம்பரியத்தின் படி, மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது

இரவு 7.50 - போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர்

இரவு 7.55 -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கார்த்திகை தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பு புறப்பட்டனர்

இரவு 7.55 - சி.ஐ.எஸ்.எப் வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையீடு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

இரவு 7.55 - திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+