மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ் பூல்பாண்டியன்.. வீடு வீடாக யாசகம் பெற்ற ரூ.50,000 பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கி அசத்தல்

Google Oneindia Tamil News

மதுரை: யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக 10000 வீதம் 5வது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார் யாசகர்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள் , ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்டார்.

AlmsSeeker donated the Rs.50,000 money received to the Madurai District Collector

பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று வருகிறார்.

இவ்வாறு யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். அதைத்தொடர்ந்து நான்கு முறை ரூ.10000 வீதம் மொத்தமாக இதுவரை 50 ஆயிரம் பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார்.

AlmsSeeker donated the Rs.50,000 money received to the Madurai District Collector

இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்தவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன?சீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன?

யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாக கொண்ட பூல்பாண்டியன், தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு உதவும் வகையிலான நிதி வழங்கிவருகிறார்.

Recommended Video

    குடியரசுத் தலைவர் மாளிகையிலும் இனி கபசுர குடிநீர்
    AlmsSeeker donated the Rs.50,000 money received to the Madurai District Collector

    தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதிலும் வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அளிப்பேன் என தெரிவித்தார்.

    https://tamil.oneindia.com/news/delhi/scientists-worried-about-season-of-two-viruses-390990.html

    English summary
    AlmsSeeker has donated the money received by Yasak to the Madurai District Collector for the 5th time at the rate of Rs.10,000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X