வியந்த மதுரை.. மண மேடையிலிருந்து திடீர்னு இறங்கி வந்த மாப்பிள்ளை.. அடுத்த செகண்டே.. செம சர்ப்ரைஸ்
மதுரை: மதுரையில் நடந்த திருமண விழா ஒன்று இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது.. இதையடுத்து, மணமக்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். என்ன நடந்தது?
மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார்.. இவருக்கு யுவராணி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.. மணமக்கள் இருவருமே பட்டதாரிகள்.

நேற்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில், உற்றார், உறவினர்கள் சூழ, இவர்களது திருமணம் நடைபெற்றது.. அனைத்து குடும்ப பந்தங்களின் ஆசீர்வாதத்துடன், யுவராணி கழுத்தில் மகேஷ்குமார் தாலியை கட்டினார்..
இசைக்குழுவினர்: திருமணம் முடிந்ததுமே, இசைக்கச்சேரி ஆரம்பமானது.. மேடையிலேயே இசைக்குழுவினர் பல்வேறு பாடல்களை பாடி அசத்திக் கொண்டிருந்தனர்.. அப்போது மாப்பிள்ளை மகேஷ்குமார், திடீரென மணமேடையை விட்டு கீழே இறங்கினார்.. கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதியை நோக்கி சென்றார்.. இதைப்பார்த்துமே மண்டபத்தில் வந்திருந்தவர்கள் குழப்பத்துடனே மணமகனை கவனித்தனர்.
நேராக ட்ரம்ஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மகேஷ்குமார், அதில் உட்கார்ந்து ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.. ஏதோ ஆசைக்காக ட்ரம்ஸ் அடிக்கிறார் என்று பார்த்தால், நிஜமாகவே டிரம்ஸ் வாசித்து கலக்கிவிட்டார்.. மணமகன் அருகில் இதைப்பார்த்து கொண்டே அசந்துபோய் நின்றுவிட்டார் மணமகள்..

விசில் சத்தம்: அங்கிருந்த அனைவருமே டிரம்ஸ் இசைக்கு கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.. மண்டபம் முழுக்க விசில் சத்தம் எதிரொலித்தது... மகேஷ்குமார் டிரம்ஸ் வாசித்து முடித்ததுமே, மணப்பெண் யுவராணி கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்..
மாப்பிள்ளை மகேஷ்குமார் மிகவும் திறமைசாலியாம்.. முக்கியமாக தன்னை சுற்றியிருக்கும் அனைவரையுமே மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளக்கூடியவராம்.. திடீரென மணக்கோலத்தில் டிரம்ஸ் வாசிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பூரிக்கிறார்கள் மணமக்கள் குடும்பத்தினர்.
வாழ்த்துக்கள்: மாப்பிள்ளை டிரம்ஸ் வாசிப்பதும், மணப்பெண் அவருக்கு வாழ்த்து சொல்வதும் என இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை காணும் நெட்டிசன்களும், மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
திருமணம் முடிந்ததுமே, மணமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான், திருமண விழாவில் இசைக் கச்சேரி நடந்துள்ளது.. போட்டோ எடுத்து கொண்டிருந்தபோது, திடீரென மணமகன் மாலையுடன் மேடையில் இருந்து கீழே இறங்கவும், மணமகளும் அவருடனேயே ஒன்றும் புரியாமல் வந்துள்ளார். அதற்குபிறகுதான், டிரம்ஸ் வாசித்து அசத்திவிட்டார் மணமகன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications