“நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சொன்ன வார்த்தை”.. நீதிமன்றத்தில் நடந்ததை விளக்கிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
மதுரை: ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றத்தில் நடந்தது பற்றி விளக்கி உள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இவர் அனைத்து சாதியினரும் அர்ச்கராகலாம், திருப்பரங்குன்றம் வழக்கு, கூடங்குளம் அணு உலை, காவல்நிலைய மரணங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான பல பொது நல வழக்குகளில் ஆஜராகி உள்ளார். மேலும் பல போராட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகரன் அமர்வு முன் ஒரு வழக்கு விசாரணக்கு வந்தது. அந்த வழக்கில் வேறு ஒரு வழக்கறிஞர் ஆஜராகி வரும் நிலையில் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி வாஞ்சிநாதன் ஆஜரானார்.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு நான் மத ரீதியாக, சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
நீதிபதி மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நீதிபதியே, வழக்கறிஞரை அழைத்து பதில் சொல்ல வேண்டும் என உத்தரவிட்ட இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் நடந்தது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். "பல்வேறு தீர்ப்புகளை தொகுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு புகாரை அனுப்பினேன். புகார் அளிப்பது ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை. அந்த புகார் விவரங்களைப் பற்றி நான் பொதுவெளியில் எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில் ஒரு தஞ்சை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி தொடர்பான வழக்கில் நான் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த வழக்கில் மற்றொரு வழக்கறிஞர் ஆஜராகி அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நான் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய புகாரின் நகலை ஸ்கேன் செய்து ஒரு வழக்கறிஞர் குழுவில் பதிவிட்டுள்ளார். அது எனக்குத் தெரியாது.
இந்நிலையில் வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்தார். ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத்தில் பணியாற்றும் ஒருவர் எனக்கு போன் செய்து எனக்கு ஒரு சம்மன் வந்ததாகத் தெரிவித்தார். ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நான் ஆஜர் ஆனேன். அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு நான் மத ரீதியாக, சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில், மத ரீதியில் உள்ளதாக சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான், "உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு எப்படி பதில் அளிப்பது? நீங்கள் எழுத்துப்பூர்வமாக கூட கேள்வி எழுப்பினால் நான் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கிறேன்." என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி, "நீங்கள் ஒரு கோழை. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீர்களா? பயப்படுகிறீர்களா?" எனக் கேட்டார். "நான் பயப்படவில்லை, நான் எங்கும் ஓடிப்போகப்போவதில்லை. நீங்கள் எழுத்துப் பூர்வமாக கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்" எனக் கூறினேன்.
இதைத்தொடர்ந்து, "ஜி.ஆர்.சுவாமிநாதனின் நீதி பரிபாலனை சாதி ரீதியாக, மத ரீதியாக இருப்பதாக சொன்ன குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளீர்களா?" என்ற கேள்விக்கு பதில் அளிக்க வரும் 28 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "நான் உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த அந்த புகார் பற்றி வெளியில் சொல்ல முடியாது. என் புகார் ஒரு சிட்டிங் நீதிபதி மீது ரகசியமாக அளிக்கப்பட்ட புகார். அது எப்படி வெளியில் கசிந்தது? ஒருவர் உச்சநீதிமன்றத்தை நம்பி புகார் அனுப்பும் நிலையில் யாரோ ஒரு வழக்கறிஞர் மூலம் அதுகுறித்து சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானால், புகார் அளித்த நபருக்கு என்ன பாதுகாப்பு?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications