மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் பணிகளில் பாஜக சுறுசுறு... ராமநாதபுரம் பூத் கமிட்டி கூட்டம்... மதுரை வந்த அமித்ஷா

Google Oneindia Tamil News

மதுரை: ராமநாதபுரத்தில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சின் தலைவர் அமித்ஷா மதுரை வந்தார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். பல மாநிலங்களுக்கு சென்ற அவர்... இன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார்.

Amit shah came to madurai to attend the bjp booth committee meeting

நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், இல. கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக ஹெலிபேட் திடலுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் விழா திடலுக்கு செல்கிறார்.

முன்னதாக, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பூத் கமிட்டி கூட்டத்துக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அமித்ஷாவின் கூட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
BJP Leader Amit Shah came to Madurai to attend the BJP Booth Committee meeting in Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X