மதுரையில் அமித் ஷா.. பாஜக புள்ளிகள் மட்டுமல்ல.. கூட்டணி கட்சி தலைகளுடனும் சந்திப்பு.. பின்னணி என்ன?
மதுரை: மதுரை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் சந்திக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு மதுரை வந்தடைந்தார். அதன் பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.

அமித் ஷாவின் தமிழக விசிட்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த முறை தமிழகம் வந்தபோது அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இரு கட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். தங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகளை கொண்டுவரவும், திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியை களம் இறக்கவும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் அமித் ஷா தமிழகம் வந்துள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்து முடிந்த ஒரு வாரத்துக்குள், மதுரைக்கு அமித்ஷாவும் வந்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அமித் ஷாவின் இந்த வருகையில் கூட்டணி கணக்குகள் உறுதி செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பாஜகவினர் உற்சாக வரவேற்பு
நேற்று இரவு மதுரை விமான நிலையத்துக்கு வந்த அமித் ஷாவை ஏராளமான தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு காரில் இருந்தபடியே வணக்கம் தெரிவித்தார் அமித்ஷா. பின்னர், சிந்தாமணி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினார். பாஜக மூத்த தலைவர்கள் அந்த ஹோட்டலுக்கு சென்று அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தினர்.
இன்றைய ஷெட்யூல்
இன்று காலை 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பின்னர் மீண்டும் 12 மணியளவில் ஹோட்டலுக்கு வருகிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அமித் ஷா சந்திக்க உள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என பாஜக தமிழக தலைவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆலோசனை கூட்டம்
பிற்பகல் 3 மணிக்கு மேல் வேலம்மாள் திடலில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த கூட்டத்தை முடித்து விட்டு, மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்லும் அமித்ஷா அங்கிருந்து, தனி விமானத்தில் மீண்டும் புறப்பட்டு டெல்லி செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
என்ன திட்டம்?
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒருபகுதியாகவே அமித் ஷாவின் மதுரை வருகை அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமித்ஷாவின் மதுரை வருகை, பாஜகவுக்கு தென் மாவட்டங்களில் ஏற்றம் கொடுக்கும் என்கிறார்கள் பாஜகவினர்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications