ஸ்டாலின் சொல்வது சரிதான்.. என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது.. ஆனால்! மதுரையில் பேசிய அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஸ்டாலின் சொல்வது சரிதான். . அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது.. ஆனால்.. திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய தமிழக மக்கள் காத்து இருக்கின்றார்கள். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவனாக சொல்கிறேன். நிச்சயம் திமுகவை மக்கள் வீழ்த்துவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மதுரையில் இன்று நடந்த பாஜக பொதுக்குழுவில் அமித்ஷா இவ்வாறு பேசினார்.

மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பேசினார். மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

amit-shah-says-dmk-can-t-be-defeated-by-bjp-but-people-will-uproot-them-in-tamil-nadu

நான் மதுரை வந்ததும் மீனாட்சி அம்மனை வணங்கினேன். மதுரையின் சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகரை வணங்கிவிட்டு என் உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து வருந்துகிறேன். நம்முடையை மதுரை சாதாரண மதுரை இல்ல. 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று மிக்கதாகும்.

இந்த மண்ணின் நாயகராக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன். வரும் ஜூன் 22 ஆம் தேதி முருகன் மாநாட்டை இந்த மண்ணில் சிறப்பாக நடத்த வேண்டும். மதுரை மண் பலவித மாற்றங்களுக்கு வித்திடும் மண். இன்றைக்கு இந்த மீட்டிங்கில், அத்தனை தொண்டர்கள் மத்தியில் நான் சொல்கிறேன். இந்த மதுரை மண் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும். வரும் தேர்தலில் திமுக தோல்வியடையும்.

திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொல்கிறார். நான் சொல்கிறேன் திமுகவை தோற்கடிக்க அமித்ஷாவால் முடியாது. ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிப்பார்கள். திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய தமிழக மக்கள் காத்து இருக்கின்றார்கள். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவனாக சொல்கிறேன். நிச்சயம் திமுகவை மக்கள் வீழ்த்துவார்கள்.

ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை கண்டறிந்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது இந்தியா. மோடி சொல்கிறார் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பயங்கரவாதத்தை மீண்டும் பாகிஸ்தான் கையில் எடுத்தால், பயங்கரவாதிகளின் வீடுபுகுந்து இந்தியா தாக்குதல் நடத்தும்.

பயங்கரவாதிகள் கைவரிசை காட்டியபோது முந்தைய அரசுகள் வீர தீர செயல்களை செய்ய தவறிவிட்டன. மோடி ஆட்சியில் எல்லா துறைகள் போல, ராணுவத்திலும் ஆத்ம நிர்பர் மூலம் தன்னிறைவு பெற்றுள்ளது. பயங்கரவாதிகள் வாலாட்டினால் அழிக்கப்படுவார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வான்வளி பாதுகாப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். இங்கு ஆட்சி நடந்திக்கொண்டிருக்கும் திமுக ஊழல் தான் செய்து வருகிறது. திமுக நூற்றுக்கு நூறு தோல்வியடைந்த ஆட்சி. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்த திமுக ஆட்சி. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. ஊழலால் மட்டும் அல்ல கள்ளச்சாராயத்தாலும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சாதி, பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறது திமுக. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+