Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி அமித் ஷா அடிக்கடி வருவார்.. நயினார் நாகேந்திரன் சொன்ன கணக்கு.. முருகன் மாநாட்டில் அது இருக்காது!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முருகன் மாநாட்டில் பக்தர்களிடம் அரசியல் பேசக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக கூறிய நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பக்தி இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள திடலில் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இன்னும் 2 நாட்களில் மாநாடு நடக்கவுள்ள நிலையில், அனைத்து பணிகளையும் முடித்து பக்தர்களின் வருகைக்காக திடல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி அமைக்கப்பட்டு, அந்தந்த கோயில்களில் பூஜை செய்யப்பட்ட வேல் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.

Amit Shah to Visit Tamil Nadu Frequently Says BJP State Chief Nainar Nagendran

முருகன் மாநாடு

பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த பலரும் இந்த முருகன் மாதிரி கோயில்களை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாநாட்டு திடலுக்கு வந்தார். இதன்பின் அங்குள்ள கோயில்களில் வழிபட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நயினார் நாகேந்திரன், பழனியில் தமிழக அரசு சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

அரசியல் பேசக் கூடாது

அரசியல்வாதிகளுக்கு பக்தி இருக்கும். நான் சாமி கும்பிடக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா? மாநாட்டு திடலில் அரசியல் அதிகம் பேசக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால் பக்தி மற்றும் ஆன்மிகம் மட்டுமே பேசுவோம். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு பக்தி இல்லை

அவர்களும் இந்தியாவில் உள்ளவர்கள் தான். ஆந்திராவில் இருப்பவர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்யக் கூடாதா? அதேபோல் இப்போது ஒன்றும் தேர்தல் நடக்கவில்லை. நாங்கள் யாரும் முருக பக்தர்கள் மாநாட்டில் வாக்குகள் கேட்கவில்லை. திமுக ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு பக்தி இல்லை. அதனால் முருகன் மாநாடு நடக்கிறது.

அரசியல் மாநாடு

தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட மாநாடு, அரசியலுக்காக நடந்த மாநாடு. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது அரசின் கடமையாகும். அதற்காக தான் அறநிலையத்துறை தொடங்கப்பட்டது. அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைப்போம் என்று தெரிவித்தார்.

அமித்ஷா வருவார்

தொடர்ந்து அமித்ஷா தொடர்பான கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்று பதில் அளித்தார். ஏப்ரல் மாதம் முதல் அமித்ஷா, 2 முறை தமிழ்நாடு வந்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதனை இறுதி செய்ய அமித்ஷா தமிழ்நாடு வருவார் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+