திருப்பரங்குன்றம் சம்பவம்: பக்தர்களின் நம்பிக்கையை திமுக அரசு உடைத்துள்ளது! - அண்ணாமலை
மதுரை: திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் தீபம் ஏற்ற மறுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திமுக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் நம்பிக்கையை உடைத்திருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் பற்றி இனி விளக்க அவசியமில்லை. அது ஒரு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் மலையில் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தை தாக்குகிறது.

இன்று, நூற்றுக்கணக்கான காவல்துறையினரை போட்டு, பக்தர்கள் மதச் சடங்குகளைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், திமுக ஆட்சி அதன் திருப்திப்படுத்தும் அரசியலில் முழுமையாக இறங்கியிருக்கிறது.
சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மீது இந்த அரசுக்கு எந்த மரியாதையும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்ஜி சூர்யா, "திருப்பரங்குன்றத்தில் முருகனை கும்பிட வந்த அப்பாவி பக்தர்கள் மீது காவல்துறை நடத்திய வெறித்தனமான தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்! இந்துக்கள் என்றாலே இந்த தி.மு.க அரசுக்கு ஏன் இவ்வளவு கசப்பு? பக்தர்களை ஏதோ தீவிரவாதிகள் போல விரட்டி விரட்டி அடிப்பதுதான் உங்கள் '#திராவிடமாடல்' ஆட்சியா?
காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி, பக்தர்களின் நம்பிக்கையை மிதிக்கும் மு.க.ஸ்டாலின் அரசே, மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே தீர வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications