ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை.. என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்.. அண்ணாமலை கொடுத்த ட்விஸ்ட்!
சிவகங்கை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை என்றும், அவர் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் ஓபிஎஸ், இப்போது தனித்துவிடப்பட்டுள்ளார். அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக பதிவு செய்துவிட்டார். அதிமுகவில் இணைவதற்கு எந்த நிபந்தனையும் ஓபிஎஸ் வைக்கவில்லை. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அவரை ஏற்க தயாராக இல்லை என்று கூறிவிட்டார்.

இதனால் ஓபிஎஸ்க்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்து சில தொகுதிகளில் போட்டியிடுவது, தவெகவில் இணைவது அல்லது பாஜகவில் இணைந்து பொறுப்பில் இருப்பது ஆகிய வாய்ப்புகளே உள்ளன. தை மாதத்தில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில், தை மாதம் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் என்ன முடிவு என்று அறிவிக்கவில்லை.
அதிகமாக நம்பியிருந்த பாஜக தலைமையில் கைவிட்டதால், தேனி மாவட்டத்திலேயே ஓபிஎஸ் முகாமிட்டிருக்கிறார். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் இருந்த ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துவிட்டனர். இதனால் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. நன்றாக உழைக்கிறார். மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்ல வந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார்.
கமல்ஹாசன் எம்பியாக இருப்பதால், அவர் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு வரும்போது திருத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அதேபோல் தவெக தலைவர் விஜய் அவரது கட்சி மற்றும் கொள்கைகளை மக்கள் முன் வைக்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கொள்கையை நாங்களும் மக்கள் முன் வைக்கிறோம். இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்.
அரசியலில் நாகரீகம் என்று உள்ளது. லட்சுமண ரேகையை கடக்கக் கூடாது என்றுதான் விஜய் தரப்புக்கு சொல்கிறேன். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை. அவர் எங்களோடு தான் இருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸை என்டிஏ-வில் இணைக்க முயற்சிகள் நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications