பொருளாதாரத்தில் 2வது இடத்தில் உத்தரப் பிரதேசம்.. 3வது தான் தமிழகம்! காரணம் திமுக தான் - அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, உத்தரப் பிரதேசத்தை விட தமிழகம் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இன்றைய 'என் மண் என் மக்கள்' பயணம், தூங்கா நகரம் என்ற பெயர்பெற்ற, 2,000 ஆண்டுகள் பழமையான மதுரையின், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்கள் பேரன்புடன் பெரும் திரளாகச் சூழ, வெகு சிறப்பாக நடைபெற்றது.

Annamalai has criticized that Tamil Nadu is lagging behind Uttar Pradesh economically

மதுரை மண் அரசியல் மாற்றத்திற்கான மண். இந்த மண்ணில் எப்போதுமே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணும் மக்கள் நிறைந்த மண். எல்லா தலைவர்களும் முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்த விரும்புவார்கள். தமிழக அரசியலின் திருப்புமுனை அனைத்துமே மதுரையில் இருந்தே தொடங்கியிருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, தடம் மாறியிருக்கும் தமிழக அரசியல் களத்தைச் சரி செய்வதற்கான ஒரு தேர்தலாக இந்த 2024 பாராளுமன்ற தேர்தல் அமையும். ஒவ்வொரு தேர்தலின்போதும், யார் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாகத் தெரியாமல்தான் மக்கள் வாக்களிப்பார்கள். வரலாற்றில் முதன்முறையாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 400 தொகுதிகளுக்கும் மேல் பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க உள்ளார் என்ற தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் அனைவருக்கும் நிச்சயமாகத் தெரிந்துள்ள ஒரே தேர்தல் இதுதான்.

தமிழகத்தில் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்காக, இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசியலைச் சுத்தம் செய்து, சாமானிய மக்களுக்கான அரசியலைக் கொண்டு வர, ஊழலை, அடாவடித்தனத்தை, குடும்ப அரசியலை, மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகப் பார்க்கும் மலிவான அரசியலை, தமிழகத்தில் இருந்து அகற்றுவதற்கான முதற்படியாக இந்த பாராளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய குழந்தைகள் ஒரு நல்ல சமுதாயத்தில், ஒளிமயமான தமிழகத்தில், உலகின் முதன்மை நாடாக மாறிக் கொண்டிருக்கும் நமது இந்திய நாட்டில் நன்றாக வாழ வேண்டுமென்றால், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி அவர்களை நாம் தேர்ந்தெடுக்கத் தவறக்கூடாது என்பதில் அனைத்து மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் நாம். முதல் மூன்று தமிழ்ச் சங்கம் நமக்குத் தெரியும். நான்காவது சங்கத்தை, ஐயா பாண்டித்துரை தேவர் அவர்கள் சிறப்பாக நடத்திக் காட்டினார். இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், உலகெங்கும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கொண்டு சென்று, ஐந்தாவது தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதுவரை தமிழ்நாட்டுக்குள் மட்டுமே திராவிடக் கட்சிகள் வைத்திருந்த நம் தமிழ் மொழியின் தொன்மையையும், செழுமையையும், கலாச்சாரத்தையும், கடந்த பத்து ஆண்டுகளில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறார்.

திருக்குறள் இன்று 39 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா சபையில் நமது தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் வரிகளை மேற்கோள் காட்டினார். அனைத்து மாநிலங்களும் தமிழ் பயில ஊக்குவிக்க வேண்டும் என்று பிற மாநில மக்களிடம் கேட்டுக் கொண்டார். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம், திருக்குறளைக் காட்டி ஊக்கப்படுத்தினார். 2021 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போது அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். டெல்லியில், கல்வியின் மதிப்பைப் பற்றிப் பேச திருக்குறளை மேற்கோள் காட்டினார். ரூ. 74 கோடி செலவில், சென்னை தரமணியில் உள்ள செம்மொழி ஆய்வு நிறுவனத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். எப்படி மதுரை மண்ணிலே பாண்டித்துரை தேவர் ஐயா அவர்களின் நான்காவது தமிழ்ச் சங்கத்தின் புகழ் நிலைத்திருக்கிறதோ, அதே போல, ஐந்தாவது தமிழ்சங்கம் என்றால் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பெயர்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், தமிழக திமுக அமைச்சர் ஒருவர், அரசுப் பள்ளி விழா ஒன்றில், மாணவர்கள் மத்தியில், வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்குப் பதிலாக, வாழ்துகள் என்று எழுதுகிறார். 2022 ஆம் ஆண்டில் நடந்த பத்தாம் வகுப்பு தமிழ் மொழித் தேர்வில், 55,000 குழந்தைகள் தேர்ச்சி பெறவில்லை. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், தாய்மொழியை மறந்ததில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். 70 ஆண்டு காலமாக மேடை போட்டு தமிழ்மொழியை வைத்து வியாபாரம் செய்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தமிழ் மொழியை வளர்த்த லட்சணம் இதுதான்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வந்து குடியேறிய சௌராஷ்டிரா மக்கள், தமிழகத்தால், தமிழ் மக்களால் அரவணைக்கப்பட்டு, இன்று மதுரையின் அடையாளமாக மாறிவிட்ட சௌராஷ்டிரா பெருமக்களையும் அவர்கள் பூர்வீகத்தையும் இணைக்கும்படி, சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கம் கொண்டாடப்பட்டது. இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக நமது பிரதமர் அவர்கள் தமிழ்ச் சங்கங்கள் மூலமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஏற்படுத்திக் குளிர்காய்கிறார்கள்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து ரயில் சேவைகளை வழங்கியுள்ளார். தமிழகத்தின் ஒவ்வொரு முக்கிய நகரத்தில் இருந்தும், கடந்த 20 நாட்களாக ஒரு ரயிலில் இரண்டாயிரம் தமிழ் மக்கள் அயோத்திக்குச் செல்கிறார்கள். உணவு, தரிசனம், பயணக் கட்டணம் அனைத்தும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. தமிழகத்தில் இருந்து அனைவரும் சென்று அயோத்தியில் நம்முடைய குழந்தை ராமரை தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள்.

ஆனால் திமுக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்களை திட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உத்தரப்பிரதேசம் முன்னேறியிருக்கிறது. தமிழகம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவினுடைய ஒரு முக்கிய பொருளாதார மாநிலமாக முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், அது திமுகவால் முடியாது.

எந்தத் தொலை நோக்குச் சிந்தனையும் திமுகவிடம் கிடையாது. கடந்த 33 மாத காலமாக திமுக ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு இலக்கணமாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. கடன் வாங்கிய மாநிலங்களில் இந்தியாவில் முதல் இடம். மது விற்பனை மூலமாக இந்த ஆண்டு வருமானம் ரூ 44,000 கோடி. இவர்களால் எந்த பிரயோஜனமும் கிடையாது. 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் முழுமையாக 20 தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்றது, அனைத்து மகளிருக்கும் ₹1000 உரிமைத் தொகை, மாணவர்களுக்கு கைக்கணினி, என எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், ஏற்கனவே இருந்த நலத்திட்டங்களையும் நிறுத்தியதுதான் திமுக அரசின் சாதனை. நிலைமை இப்படி இருக்க, நமது முதலமைச்சர் அவர்கள் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் கூறிக்கொண்டிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு, பாஜக 295 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அந்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, 2024 தேர்தலைச் சந்திக்கிறது. திமுக கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றியிருக்கிறது என்பதை ஒவ்வொன்றாகக் கூறத் தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் உட்கட்டமைப்புக்கு செலவு செய்தது ரூ.2 லட்சம் கோடி. இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், ரூ.11 லட்சம் கோடியை நாட்டின் உட்கட்டமைப்பிற்கு செலவு செய்திருக்கிறோம்.

மொழியை மட்டும் மூலதனமாக வைத்து திமுக இங்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. மதுரை அமைச்சர் மூர்த்தி, ஜீ ஸ்கொயர் என்ற ஒரே ஒரு நிறுவனத்திற்காக மொத்த பத்திரப்பதிவு துறையையும் கைகட்டி வேலை செய்ய வைக்கிறார். பத்திரப்பதிவு துறையில் பணி நீக்கத்தை ரத்து செய்ய ஒரு கட்டணம், இடமாற்றத்துக்கு ஒரு கட்டணம் என ஒவ்வொன்றுக்கும் வசூல் வேட்டை நடக்கிறது. இப்படி வசூல் செய்த பணத்தில்,மதுரையில் ஒரு பிரம்மாண்ட மால் கட்டிக்கொண்டு இருக்கிறார் என்ற செய்தி அறிந்தோம். இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரையும் மக்கள் ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் இது.

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்கவில்லை என்றால், நம்முடைய குழந்தைகள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியாது. அரசியல் வாரிசுகள் வரிசையாக வருவார்கள். ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும். ஊழல் செய்யக்கூடிய குடும்பங்கள் எதுவும் அரசியலில் இருக்கக் கூடாது. இதை ஒரு வேள்வியாகவே பாஜக முன்னெடுக்கும்.

வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல். எந்த வேலையும் செய்யாத கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு வேண்டாம். ஊழல் குடும்ப அரசியல் நமக்கு வேண்டாம். ஓய்வின்றி உழைக்கும் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, அடுத்து வரும் நாட்களில் நாம் அனைவருமே நமது பிரதமர் மோடி அவர்களைப் போல ஓய்வின்றி உழைத்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். 2026 அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+