“மோடியின் அட்ரஸ் மேலூர்”.. மதுரையில் பாஜக யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை! ஆன்மீக பூமி என புகழாரம்
மதுரை: ராமேஸ்வரத்தில் தொடங்கிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று மதுரையில் தனது யாத்திரையை தொடங்கி இருக்கிறார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் யாத்திரையை தொடங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த இந்த யாத்திரை இன்று மதுரைக்கு வந்தடைந்தது.

மதுரை மேலூரில் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை கிராமங்களின் தாய் கிராமமான மேலூரில், இன்றைய தினம் 'என் மண்; என் மக்கள்' பயணம் சிறப்புற நடந்தேறியது. தலைசிறந்த ஆன்மீக பூமி மேலூர். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். அப்படியான திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மேலூர் அருகே உள்ள திருவாதவூர்.
விவசாயத்திற்கு பேர் போன மேலூர் கலப்பை தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் மேலூர் திரு வி. மாணிக்கத் தேவர் இவர் உருவாக்கிய ' போஸ் கலப்பைத் தொழிற்சாலை', 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் எளிமையான அரசியல்வாதி என்ற பெயரெடுத்த முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் அவர்களை நமக்கு தந்த ஊர்.
மோடியின் முகவரி: மேலூர் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் பயன்பெற்ற 2,30,312 பேரில் மேலூரைச் சேர்ந்த திருமதி கவிதா அவர்கள், தமிழகத்தில் வருடம் 6000 ரூபாய் பயனடையும் 46 லட்ச விவசாயிகளில் மேலூர் திருச்சுனையை சேர்ந்த திரு ராசு அவர்கள், தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினால் பயன்பெறும் 30 லட்ச பேரில் மேலூர் பள்ளபட்டியைச் சேர்ந்த செல்வி வித்யா அவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்தில் 57 லட்ச புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதன் மூலம் பயன்பெற்ற மேலூர் பள்ளபட்டியைச் சேர்ந்த திருமதி லதா அவர்கள், உஜ்வாலா திட்டம் ஒன்று மற்றும் இரண்டின் கீழ் 37 லட்சம் பயனாளிகளில் ஒருவரான மேலூரைச் சேர்ந்த திருமதி கங்கா அவர்கள். இவர்கள் அனைவரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி.
விவசாயிகளுக்கு உர மானியம் 3,68,676 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஹெக்டேருக்கு ₹ 8909 உர மானியம். 2200 ரூபாய் விலையுள்ள ஒரு மூட்டை யூரியாவுக்கு 1958 ரூபாய் மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு 242 ரூபாய்க்கு வழங்குகிறது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 2013-14 ஆண்டு ₹1310 லிருந்து 2022- 23 ஆண்டு ₹2183 ஆக, 67 சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நீர்நிலை மேம்பாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி 2971 கோடி ரூபாய். பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு 1231 கோடி ரூபாய். விவசாயத்தை மேம்படுத்த, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்கிட கடந்த 9 ஆண்டுகளில் மத்திய மோடி அரசு வழங்கிய நிதி 1872 கோடி ரூபாய்." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications