Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொல்லி அடித்த கில்லி.. 8 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி இந்த ஆண்டும் முன்னிலை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த கார்த்தி, இந்த ஆண்டும் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது வரை 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 8 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார் அவனியாபுரம் கார்த்தி. இறுதிச் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்

jallikattu madurai avaniyapuram

அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி (இன்று) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பாலமேட்டில் நாளை, அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை ஆட்சியர் சங்கீதா தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டு திமிறிய காளைகளை, வீரத்துடன் காளையர்கள் அணைத்து வருகின்றனர்.

அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில் தற்போது வரை 4 சுற்றுகள் முடித்துள்ளன. 4 வது சுற்று முடிவில் மொத்தம் 16 பேர் காயமடைந்துள்னனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை சுமார் 250 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

மூன்றாம் சுற்றில், மொத்தமாக 89 மாடுகள் களம் கண்ட நிலையில், அவற்றில் 27 மாடுகள் பிடிபட்டன. மூன்றாவது சுற்றில் 8 காளைகளை அடக்கினார் அவனியாபுரம் கார்த்தி. 7 காளைகளை அடக்கினார் குன்னத்தூர் திவாகர்.

இதுவரை மொத்தம் 4 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், அதிக காளைகளை அதாவது 8 காளைகளை அடக்கி முதல் இடத்தில் இருக்கிறார் அவனியாபுரம் கார்த்தி. அடுத்த இடத்தில், 7 காளைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் குன்னத்தூர் திவாகர்.

ஒவ்வொரு சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்படும் மாடுபிடி வீரர்கள், இறுதிச் சுற்றில் பங்குபெற்று காளைகளை அடக்குவார்கள். இறுதிச் சுற்றுகளின் முடிவு, ஜல்லிக்கட்டு நிறைவடைந்ததும் இன்று மாலை அறிவிக்கப்படும்.

அதிக காளைகளைத் தழுவி வெற்றி பெற்ற வீரர்களில் முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும், சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்திருந்தார் கார்த்தி. கடந்த 2023 ஆம் ஆண்டில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கி, முதலிடம் பிடித்து சொகுசு காரை பரிசாக பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+