“கையிலே ஆகாசம்”.. காரில் முதல் முறை ஏறுகிறேன்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வென்ற மின் ஊழியர் விஜய்
மதுரை: உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை பிடித்து முதலிடம் பெற்ற வீரர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கப்படும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிசான் காரை பரிசாக வென்று இருக்கும் நிலையில் முதல்முறையாக தான் காரில் ஏறப்போவதாக உணர்ச்சிகரமாக தெரிவித்து இருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய், "ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இதற்கு முன் பைக் வெற்றிபெற்று இருக்கிறேன். அதிகளவில் பயிற்சி செய்தேன். வலிகளை தாங்கிக்கொண்டேன். கால் சரியில்லாமல் அடிபட்டு இருந்தேன்.
இதற்கு முன் காரை வாங்கியது இல்லை. இதுதான் முதல் முறை. ரொம்ப சந்தோசமா உள்ளது. நான், என் தங்கை, அப்பா, அம்மா இதுதான் எங்கள் குடும்பம். நான் தான் குடும்பத்தின் மூத்த மகன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மின்வாரிய ஊழியர்
நான் மின்வாரியத்தில் கேங்மேனாக அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். நேரம் கிடைக்கும் சமயத்தில் எல்லாம் ஜல்லிக்கட்டு பயிற்சி செய்துகொள்வேன். ஆன்லைன் முன்பதிவு முறை எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. எனக்கு கடைசி வரை டோக்கன் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில்தான் எனக்கு கிடைத்தது.

ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம்
287 வது டோக்கன் தான் எனக்கு கிடைத்தது. 2 முறை சிறந்த வீரருக்கான பரிசு வாங்கி இருப்பதால் எனக்கு விழாமுடி சித்தன் என்ற அண்ணன் டோக்கன் வாங்கிக் கொடுத்தார். ஆள்மாறாட்டம் நிறைய நடந்து இருக்கிறது. கமிட்டி மூலமாக டோக்கன் கொடுத்தால் அவர்கள் திறமையை வைத்து மாடுகளை பிடிப்பார்கள்.

ரூ.200 செலவு
ஆன்லைன் முறையில் யார் யாரோ டோக்கன் வாங்குகிறார்கள். புதிதாக மாடுபிடிப்பவர்கள் வருகிறார்கள். இதற்கு ரூ.200 வரை செலவாகிறது. ஈ சேவை மையத்துக்கு சென்றால் ரூ.200 கேட்கிறார்கள். சத்தியமாக கொடுக்க முடியவில்லை. படிக்காதவர்கள் என்ன செய்வார்கள். அதற்கு நேரடியாக கமிட்டியை வைத்தே கொடுத்துவிடலாம்.

முதல் முறையாக காரில்
பரிசு காரை நான் பார்த்தேன். இப்போதுதான் முதல் முறையாக காருக்கு பக்கத்தில் நின்று உள்ளே போய் உட்கார போகிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அமைச்சர் மூர்த்தி ஐயாவை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். எங்க அண்ணன் பரத் தான் அனைத்துக்கும் காரணம். அவர்கள் இல்லாவிட்டால் மாடு பிடித்திருக்கவே முடியாது.

அப்பா, அம்மா மகிழ்ச்ச்சி
காலை 4 வது பேட்சில் மாடு பிடிக்க இறங்கினேன். நான் மாடு பிடித்தது தெரிந்து அப்பாவும் அம்மாவும் இங்கே வந்துவிட்டார்கள். எங்கள் உதவி பொறியாளர் எல்லோரும் போன் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். போனை எடுக்க முடியவில்லை. போய்தான் அவர்களிடம் பேச வேண்டும்." என்று உணர்ச்சி பொங்க அவர் பேசினார்.

விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியவில் நிறைவடைந்தது. மொத்தம் 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒரு சுற்றுக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 25 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் 4 வது சுற்றில் இறங்கிய விஜய் 11 வது சுற்று வரை போராடி 28 மாடுகளை பிடித்து அசத்தினார். கார்த்தி என்ற இளைஞர் 17 காளைகளை பிடித்து 2 வது இடத்தையும், பாலாஜி என்ற வீரர் 13 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications