Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் பிறப்பு சான்றிதழில் அதிரடி.. குழந்தைகள் தத்தெடுப்பு மையங்களுக்கு.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்கள் குறித்து மதுரை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை வழங்கியிருக்கிறது.

ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், ரேஷன் அட்டைகளை போலவே, பிறப்பு சான்றிதழ்களும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழாகும்..

Birth Certificate and Order to issue birth certificates to 55 children says Madurai High Court bench

அடையாள அட்டைகள்: இந்த சான்றிதழ் இருந்தால்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும்.. ஆதார் கார்டு முதல், கடவுச்சீட்டு வரை அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவதற்கு இந்த பிறப்பு சான்றிதழ் மிகவும் அவசியமாகும்.

குழந்தை பிறந்ததுமே, இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து அவரவர் பெற்றோரிடம் தந்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும், பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம். அந்தவகையில், 14 நாட்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன்: முக்கிய சேவைகள் அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ்கள், ஒரே ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, ஆன்லைன் மூலமாகவும், மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.. ஆதார் அட்டையை நாம் எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறோமோ, அதேபோல, இதையும் பயன்படுத்தலாம்.

சில நாட்களுக்கு முன்பு, குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதில், தாய், தந்தை இருவரின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.. குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்: பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காக பெறப்படுகிறது என்றும், ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களின் சேர்க்கை, ஓட்டுநர் உரிமை, அரசு பணிகளுக்கான நியமனம், திருமணங்கள் பதிவு போன்ற ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் முதன்மை ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அரசு இதற்கு விளக்கம் தந்திருந்தது.

இந்நிலையில், மதுரையில் உள்ள மழலை இல்லம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய அதிரடி ஒன்றை பிறப்பித்திருக்கிறது.

தத்தெடுப்பு மையம்: மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில் சாமுவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.. குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இந்த வழக்கை தொடுத்திருந்தார். இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கலாம் என்றும், மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எந்தவிதமான தாமதமுமின்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதிரடி உத்தரவு: அதுமட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும் என்றும், சிறார் நீதிச்சட்டம், அவர்களின் பாதுகாப்பையும், உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றிதழகளை வழங்கலாம் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+