தமிழ்நாட்டை பழிவாங்கும் பாஜக! “எய்ம்ஸ்”.. நட்டா வந்த நேரத்தில் கரெக்டா கொக்கியை போட்ட சு.வெங்கடேசன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : தமிழ்நாட்டைப் பழிவாங்கும் அரசியல் நோக்கத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மத்திய பாஜக அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐஎம் சார்பில் நடைபெற்ற நடைபயணத்திற்குப் பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் 95% முடிந்து விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இதையடுத்து எம்.பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர், எய்ம்ஸ் அமையவிருக்கும் இடத்திற்குச் சென்று பொட்டலாக கிடக்கும் பகுதியப் பார்வையிட்டு, மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என கிண்டலாக தெரிவித்திருந்தனர். மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மட்டுமே நடந்திருந்த நிலையில் நட்டா பேசியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. பின்னர், பூர்வாங்க பணிகளில் 95 % முடிந்ததாகவே நட்டா தெரிவித்தார் என பாஜகவினர் விளக்கம் அளித்தனர்.

நட்டா வந்திருக்கும் நேரத்தில்

நட்டா வந்திருக்கும் நேரத்தில்

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, இன்று தமிழகம் வந்துள்ளார். கோவை மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார் ஜேபி நட்டா. கடந்த முறை தமிழகம் வந்தபோது மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்துவிட்டதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பிய நட்டா, தற்போது மீண்டும் வந்திருக்கும் அதேசமயத்தில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதுரை எய்ம்ஸ் பற்றி கேள்வி எழுப்பி, மத்திய பாஜக அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐஎம் நடைபயணம்

சிபிஐஎம் நடைபயணம்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும், தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாத்து, முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கட்சி டிசம்பர் 24ஆம் தேதி முதல் 27 வரை நடைபெற்ற நடைபயணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இப்போராட்டத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் 200க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

புளித்துப்போய் விட்டது

புளித்துப்போய் விட்டது

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் இருப்பதற்கு நிர்வாக ரீதியான காரணத்தை ஒன்றிய அரசு சொல்கிறது. உண்மையில், தமிழகத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை அரசியல் காரணத்தால் தான் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளித்துவிட்டதாக மத்திய அரசு சொல்லும் கதையைக் கேட்டு கேட்டு புளித்துப்போய் விட்டது. நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு பணி ஏன் இன்னும் துவங்கப்படவில்லை? இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்பட வேண்டும்." என வலியுறுத்தினார்.

காரணம் மட்டும் சொல்றாங்க

காரணம் மட்டும் சொல்றாங்க

மேலும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விவகாரத்திலும் மத்திய பாஜக அரசு மதுரையை வஞ்சித்து வருகிறது. விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்காமல் இருப்பதற்கு தொழில் பாதுகாப்பு படைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொன்னவர்கள், இப்போது இரவில் விமானம் வரவில்லை என்று சொல்கிறார்கள். மாற்றி மாற்றி காரணத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விமான நிலைய ஒடுதள விரிவாக்க பணிகளுக்கான 97% நிலம் மத்திய விமான போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இரண்டு குளங்களை மட்டும் வகைமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. நிலம் ஒப்படைகப்பட்டும் பணிகளை துவங்காமல் காரணத்தை மட்டுமே சொல்கிறார்கள் என விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.

அடுத்த பட்ஜெட்டில்

அடுத்த பட்ஜெட்டில்

இதற்கிடையே, மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள் பற்றிய அலுவல் ஆய்வு கூட்டம் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தலைமையில் மாமல்லபுரத்தில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதில், நில உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைப்பது போன்ற காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்காக ஜப்பான் நாட்டு வங்கியில் ரூ.1,900 கோடி கடன் எதிர்ப்பார்த்துள்ளோம். அது கிடைக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக, மத்திய அரசின் அனுமதி பெற்று ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+