பரந்தூர்.. விஜய் சொன்னால் மத்திய அரசு செய்யும்.. சீமானை நான் ஆதரிக்கிறேன்! பாஜக எச்.ராஜா ஒரே போடு!
மதுரை: பெரியார் விஷயத்தில் சீமானை நான் ஆதரிக்கிறேன் எனவும், சந்தேகமில்லாமல் ஈவேராவை எதிர்த்து முதலில் நான் தான் என கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்தை எங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால் மத்திய அரசு அமைக்க தயார் என கூறியுள்ளார்.
மதுரை ஜான்சி ராணி பூங்கா பகுதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” நேதாஜி ஐஎன்ஏவில் பெருவாரியாக இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய பங்காற்றினார்.

காரைக்குடியில் தமிழக முதல்வர் பேசும்போது நிலை தடுமாறி பேசி உள்ளார், வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிடர்களின் உரிமை.
வள்ளுவர் யார்? வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். திருக்குறள் கட்டமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில். அதன் அடிப்படையில் தான் திருக்குறளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் ஹிந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். தங்க தட்டில் இருக்கும் மலம் இன்று தந்தை பெரியார் பேசினார்.
வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா? முருகன் தோத்திரத்தை வள்ளலார் சொல்லியிருக்கிறார். அடுத்து மகாதேவ மாலை சிவனைப் பற்றி எழுதியிருக்கிறார். வள்ளலார் பெருமகனைவிட மிகச் சிறந்த ஹிந்து உண்டா? களவாட நிதி உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை பற்றி இழிவாக அழிப்பேன் என்று பேசினார். அதற்கு அவர் மீது பல வழக்குகள் உள்ளது. சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று நீதிமன்றமே சொல்லியுள்ளது.
களவாடுவது கள்ள ரயில் ஏறி வருவது திராவிட மாடல்தான். அதில் நாங்கள் போட்டி போட வரவில்லை. முதல்வர் சரியாக பேச வேண்டும். உங்களை விட களவாணி கூட்டம் இல்லை. அரிட்டாப்பட்டி சுரங்கம் அறிவிப்பிற்கு இன்னும் 24 மணி நேரம் ஆகட்டுமே இருந்தால் உங்கள் குடிகெட்டுப் போய்விடுமா?
நான் முன்னேற்றத்திற்கு எதிரானவன் அல்ல என்று ஜோசப் விஜய் பேசுகிறார், விமான நிலையம் வேண்டும் ஆனால் பரந்தூரில் இல்லை. நண்பர் விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால், மத்திய சர்க்கார் அங்கு விமான நிலையத்தை அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சனைகள் புரிவதில்லை.
தற்போது சீமான் தொடர்ச்சியாக பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். ஆனால், சந்தேகம் இல்லாமல் ஈவேரா பத்தி முதலில் பேசியது எச்.ராஜா தான். பாஜக தான். ஈவேரா தேச துரோகி, 47 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியவர். ஈவேரா தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவேராவை தொட மாட்டான், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள் தமிழிலை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது
வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசியவர் ஈவேரா, ஈவேரா ஒரு தலித் விரோதி, பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா. பள்ளனும், பறையனும் கோயிலுக்குள் போகக்கூடாது. அப்படி போனால் சூத்திரன் பார்ப்பான் அளவிற்கு உயர மாட்டான் தாழ்ந்து போவான் என்று பேசியவர் ஈவேரா. சீமான் விஷயத்தில் தற்போது நான் அவரை ஆதரிக்கிறேன்” என்றார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications