அரசு அலுவலகமா? கட்சி அலுவலகமா? மதுரை திமுக MLA தளபதி மீது பாயும் பாஜக!
மதுரை: மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பாஜக புகார் கொடுத்துள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கான அரசு பொது அலுவலகத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் செய்து வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தை கட்சி அலுவலகமாக தளபதி எம்.எல்.ஏ. கருதிவிட்டாரோ என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் விமர்சித்திருக்கிறார்..

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக விருப்பமனு விநியோகத்தை தொடங்கிவிட்டது. அந்த வகையில் மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி அறிவித்திருந்தார்.

தளபதி எம்.எல்.ஏ.
இவரது இந்த அறிவிப்பு உள்ளூர் நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்திருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தளபதி எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததோடு தேர்தல் விதிமுறைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். திமுக எம்.எல்.ஏ. மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட நிர்வாகம்
வலையில் தானாக சிக்கிய மீனை போல் இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ. தளபதி பாஜகவிடம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் ஏற்கனவே திமுகவில் இருந்ததால் அப்போதே அவருக்கும் தளபதி எம்.எல்.ஏ.வுக்கும் ஏழாம் பொருத்தம் என்றும் இதனால் இந்த விவகாரத்தை சரவணன் எளிதில் விடமாட்டார் எனவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அண்ணாமலையின் ஒப்புதலோடு நீதிமன்றத்தை நாடவும் சரவணன் முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொறுத்தவரை தொகுதி மக்களின் குறைகளை கேட்பதற்காகவும் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காகவும் கட்டித்தரப்பட்டுள்ள கட்டிடம் ஆகும். அங்கு தொகுதி சார்ந்த விவகாரங்களை தவிர மற்றபடி கட்சிப் பணிகளை மேற்கொள்ள சட்டரீதியாக இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு











Click it and Unblock the Notifications