திருப்பரங்குன்றத்தை குறி வைத்த பாஜக.. அதிமுக கோட்டையை விட்டுக் கொடுப்பாரா ராஜன் செல்லப்பா?
மதுரை: மதுரை மேற்கு தொகுதியை பாஜக குறி வைத்திருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியை குறி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை முருகன் மாநாடு மூலமாக மீண்டும் பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அவசியம் என்று பாஜக கருதுவதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பாஜகவினர் பங்கேற்றனர். தமிழக பாஜக வரலாற்றில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்ட மாநாடாக இந்த முருகன் மாநாடு பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டில் மீண்டும் குன்றம் குமரனுக்கே என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. மதுரை மக்களிடையே பெரியளவில் திருப்பரங்குன்றம் விவகாரம் ரசிக்கப்படவில்லை.

மதுரையில் 3 தொகுதிகள்
இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்திலும் கூட மதுரை முழுவதும் இருந்த பாஜகவினர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பாஜகவினரே கலந்து கொண்டனர். ஆனால் மதுரையை குறி வைத்து பாஜக சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித் ஷா வந்த போதும் கூட, மதுரையில் 3 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்தார்.
மதுரை மேற்கு தொகுதி
அதிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியான மதுரை மேற்கு தொகுதியும் ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே மதுரை தெற்கு தொகுதியை பாஜக கேட்டு வரும் சூழலில், மதுரை மேற்கு தொகுதி மீதும் கண் வைத்தது. இந்த இரு தொகுதிகளிலுமே செளராஷ்டிரா மக்களின் வாக்குகள் அதிகளவில் இருக்கின்றன.
பாஜகவின் குறி
இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியை விடவும் திருப்பரங்குன்றம் தொகுதி மீது பாஜக பார்வை திரும்பி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் எப்படி அயோத்தி தொகுதி பார்க்கப்படுகிறதோ, அதுபோல் திருப்பரங்குன்றம் தொகுதியை தமிழ்நாட்டில் பாஜக பார்க்கிறது. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா போட்டியிட்டு வென்றவர்.
ராஜன் செல்லப்பா விட்டுக் கொடுப்பாரா?
தற்போதைய திருப்பரங்குன்றம் எம்எல்ஏ-வான அவர், தனது தொகுதியை விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகளவில் உள்ளன. அதிமுகவுக்கும் பாரம்பரிய வாக்குகள் இருப்பதால், அது அதிமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜக போட்டியிட்டால் திருப்பரங்குன்றத்தில் வெல்வது சந்தேகம் தான். இதனால் பாஜகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!











Click it and Unblock the Notifications