அதிமுக கூட்டணியை முடிவு செய்ய வேண்டியது மாநிலத் தலைவர் அல்ல.. உடைத்து பேசிய எச்.ராஜா!
அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மதுரை: அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பாஜகவின் நாடாளுமன்றக்குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.

அண்ணாமலை பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

டெல்லி செல்லும் அண்ணாமலை
இதனால் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி உடைகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் கருத்து அவரின் சொந்த கருத்து என்று நயினார் நாகேந்திரன் கூறினார். இருப்பினும் அண்ணாமலை, டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

எச். ராஜா பேட்டி
இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கடந்த இரண்டு நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து கூறாத விஷயங்கள். அவை கசிந்த வார்த்தைகளே தவிர அவர்கள் முறையாக கூறியது அல்ல. எனவே இதை பெரிதும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

பாஜக நாடாளுமன்றக் குழு முடிவு
தொடர்ந்து, பாஜகவின் கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது. கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மத்திய பாஜக முடிவு தான் இறுதியானது. அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல. இது குறித்து பாஜகவின் நாடாளுமன்றக்குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம்
இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி பூத் கமிட்டி உருவாக்கும் பணி மட்டுமே எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருக்கிறோம். பாஜகவின் ஆதரவாளர்களும் சரி, தொண்டர்களும் சரி முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications