அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பீங்களோ?பாஜகவினரை கல்,கம்புகளால் அடித்து ஓட ஓட விரட்டிய மதுரை விசிக
மதுரை: மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. ஒருகட்டத்தில் சிக்கிய பாஜக நிர்வாகிகளை அடித்து உதைத்து விரட்டி அடித்தனர் பாஜகவினர்.
Recommended Video
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை தலைவர்களை உட்செரித்து அவர்களது சித்தாந்தங்களை நீர்த்து போகச் செய்வதில் எப்போதும் முனைப்பாக இருக்கும். அண்மைக்காலமாக அண்ணல் அம்பேத்கரை பாரதிய ஜனதா கட்சி கொண்டாடியே வருகிறது.
இத்தனைக்கும் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தத்தின் கடும் எதிரியாக திகழ்ந்தவர் அம்பேத்கர். ஆனாலும் அம்பேத்கர் கனவை நிறைவேற்றுகிறோம் என்கிறது பாஜக.

காமராஜர், பெரியார்
தமிழகத்தில் காமராஜர், எம்ஜிஆர் பெயரை சொல்லிக் கொண்டு இருக்கிறது பாஜக. டெல்லியில் காமராஜரை உயிரோடு எரித்து கொல்ல முயன்றவர்கள் பாஜகவின் தாய் அமைப்பினராகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். எம்.ஜி.ஆருக்கும் பாஜகவுக்கும் தொடர்பே இல்லை என்றபோதும் அவரது செல்வாக்கை அபகரிக்கும் போக்காக பார்க்கப்படுகிறது.

அம்பேத்கர் பிறந்த நாள்
இந்த நிலையில் இன்று அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

விசிக எதிர்ப்பு
மதுரையில் தல்லாகுளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு பாஜகவினரும் வந்தனர். ஆனால் பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரபரப்பு- பதற்றம்
அத்துடன் பாஜக நிர்வாகிகளையும் விசிக நிர்வாகிகள் தடுக்க முயன்றனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இருதரப்பையும் சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பதற்றம் தணிந்தது.

கல், கொடி கம்பங்கள்
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக நிர்வாகிகள் தப்பி ஓட முயற்சித்த போது தாக்குதலுக்குள்ளாகினர். சிலர் கொடி கம்பங்களால் போலீசார் முன்பு தாக்கினர். ஒரு பெண் நிர்வாகி பெரிய கல்லை தூக்கிக் கொண்டு ஒத்தையில் சிக்கிய பாஜக நிர்வாகியை ஓட ஓட விரட்டியடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications