தேவர் குரு பூஜைக்கு வரும்.. எடப்பாடியை சூழ்ந்த பவுன்சர்கள்.. கிட்ட நெருங்க முடியாது.. பதறிய அதிமுக
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அவர் மீது தாக்குதல் அச்சம் நிலவுவதால், 50க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இவரை குருபூஜைக்கு வரவேற்று கடிதம் கூட ஆர் பி உதயகுமார் எழுதி உள்ளார். தனது ரத்தம் மூலம் அவர் கையெழுத்து போட்டுள்ளார்.

எச்சரிக்கை; இதை ஏற்றுக்கொண்டு தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், முக்குலத்தோர் பிரிவினருக்கு தலைவர்கள் சசிகலா, ஓ பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர்தான். தேவையின்றி எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அசிங்கப்பட கூடாது. அங்கே சென்றால் அவருக்கு அசிங்கம் மட்டுமே ஏற்படும். இவரை ஒரு காலத்திலும் முக்குலத்தோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். தங்க கவசம் இருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கே வரவேற்பு கிடைக்காது.
குரு பூஜை நடக்கும் கோவிலுக்கு.. சந்நிதிக்கு அவர் செல்ல முடியாது. அப்படி செல்ல முயன்றால் அவருக்கு அசிங்கம்தான் ஏற்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு அடி விழுந்தால் அவருக்கு அசிங்கம். தமிழ்நாட்டிற்கும் அசிங்கம். அதை ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயாராக இருக்க வேண்டும். அவரை முக்குலத்தோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி எனக்கு பலம் இருக்கிறது நான் போவேன் என்று இருக்க கூடாது.
உங்கள் சகாக்கள் வேண்டுமானாலும் போகலாம். மக்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால் நீ போக கூடாது. மீறி சென்றால் நிலைமை உனக்கு எதிராக செல்லும். உன்னுடன் இருக்கும் துரோகிகளை மக்கள் மன்னிப்பார்கள். அவர்கள் காசுக்கு விலை போனவர்கள். ஆனால் உன்னை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முக்குலத்தோர் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அழைப்பு; இந்த நிலையில்தான் தேவர் குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்காக அவர் 5000 பேரை கொங்கு , வடக்கு மண்டலத்தில் இருந்தும் இறக்க உள்ளாராம். தனக்கு பாதுகாப்பாக தன்னை சுற்றி இருக்குமாறு 5000 பேரை கொண்டு வர தனக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
பவுன்சர்கள்: குரு பூஜை விழாவில் என்ன நடந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடப்பாடி எடுத்ததே இதற்கு காரணம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அவர் மீது தாக்குதல் அச்சம் நிலவுவதால், 50க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications