Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் சீண்டல் செய்த உதவி ஜெயிலரை செருப்பால் அடித்த தந்தை-மகளுக்கு எதிராக போலீஸ் வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாணவிக்கு தொந்தரவு அளித்ததாக உதவி ஜெயிலரை செருப்பால் தாக்கிய தந்தை, மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக உதவி ஜெயிலர் பாலகுருசாமி, மாணவியை தனியாக அழைத்ததாக கூறி, நடுரோட்டில் வைத்து மாணவியின் சித்தி, தாத்தா ஆகியோர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து உதவி ஜெயிலர் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி (வயது 52) என்பவர் அடிக்கடி சென்று சாப்பிடுவது வழக்கமாம். அப்போது, அங்கிருந்த கைதியின் மகளிடம் பேசியிருக்கிறார். மேலும் அங்கிருந்த கைதியின் 14 வயது பேத்தியிடமும் பேசி, தனது செல்போன் எண்ணை கொடுத்து, பள்ளி படிப்புக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் என கூறினாராம். இதனை தொடர்ந்து அவர், மாணவியிடம் அவ்வப்போது செல்போனில் பேசி நலம் விசாரித்து வந்தாராம்.

madurai jailer jail

இதற்கிடையே, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உதவி ஜெயிலர் பாலகுருசாமி, மாணவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 14 வயது மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, மாணவி தனது தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோருடன் உதவி ஜெயிலர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பாலகுருசாமியை மாணவியின் தாத்தா, சித்தி ஆகியோர் சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாணைக்கு பின்னர் நேற்று உதவி ஜெயிலர் பாலகுருசாமியை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி விசாரணை நடத்தி சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே அரசு ஊழியரான உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொது இடத்தில் வைத்து தாக்கியதாக ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகள் மீது மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+