தபால் ஓட்டு போட வந்தவர்களிடம் வாக்கு கேட்ட ராஜ் சத்யன்.. கொந்தளித்த அண்ணாதுரை.. கேஸ் போட்ட போலீஸ்
மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

மதுரை: ஓட்டு போட வந்தவங்க கிட்டயே ஓட்டு கேட்கலாமா.. அப்படித்தான் ஓட்டு கேட்டுட்டு இன்னைக்கு கேஸ் புக் பண்ற அளவுக்கு போயாச்சு!
மதுரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். இவர் ராஜன் செல்லப்பா மகன். கட்சி செல்வாக்கு, பண பலம், எல்லாம் இருக்கிறது. இதுபோக அந்த மாவட்ட அமைச்சர்களின் பிரச்சாரமும் நிறைய பலம் தருகிறது.
இந்நிலையில், மதுரை லோக்சபா தொகுதி, போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு, நேற்று, மீனாட்சி கல்லுாரி மையத்தில் நடந்தது. அப்போது அங்கு ராஜ்சத்யன் வந்தார்.

அதிகாரிகள்
ஓட்டு போட காத்திருந்த போலீசாரிடம் சென்று கைகுலுக்கினார். பிறகு தனக்கு ஓட்டு போடும்படி கேட்டுக் கொண்டார். யாருமே பார்க்கவில்லை என்று நினைத்து ராஜ்சத்யன் இத்தனையையும் செய்து கொண்டார். ஆனால் அதிகாரிகள்தான் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு சுற்றி வருகிறார்களே.. இதை கவனித்து விட்டார்கள்.

கலெக்டர்
உடனடியாக அங்கிருந்து கிளம்பி போகும்படி சொன்னதும், ராஜ்சத்யனும் புறப்பட்டு போய்விட்டார். ஆனால் இந்த விஷயம் கலெக்டர் நடராஜன் காதுக்கு எட்டிவிட்டது. இந்த சமயத்தில் அங்கு அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை வந்தார். நடந்த சம்பவத்தை பார்த்ததும், "இதுவே நாங்கள் செஞ்சிருந்தால் விதிமீறல்னு சொல்லுவாங்க. நின்னா, நடந்தாகூட கேஸ் போடறாங்க. இப்போ இதுக்கு என்ன செய்ய போகிறார்கள்? நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

நடவடிக்கை
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கலெக்டர், ஓட்டுப்பதிவு மையத்தை பார்வையிட்டார். அப்போது அவர் சொல்லும்போது, "வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு மையத்தை பார்வையிடலாம். ஆனால் ஓட்டுதான் கேட்ககூடாது. இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வழக்கு பதிவு
இந்நிலையில், ராஜ்சத்யன் மீது செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தபால் வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிகளை மீறி காவலர்களிடம் பிரசாரம் செய்ததாக புகார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications