திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும்.. எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு.. மதுரையில் வழக்குப்பதிவு!
மதுரை: திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் பேசி இருந்தார்.
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பேச தொடங்கினர். இதன் காரணமாக 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

144 அமலில் இருந்த போது, திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே நீதிமன்ற அனுமதியுடன் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மதுரையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம். அதற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். எச்.ராஜாவின் பேச்சு அங்கு கூடி இருந்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எச்.ராஜாவின் பேச்சிற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான கண்டனம் தெரிவித்தார். மதுரையில் கூடிய கூட்டத்தை இந்து அமைப்புகள் என்று கூறக் கூடாது. அவர்கள் அனைவரும் பாஜகவினர் தான். எச்.ராஜாவுக்கு மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஒரு மதத்திற்கும், இனத்திற்கும் எதிராக தான் கோஷம் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவில் பொறுப்பில் இருப்பவர்களே மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்தி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications