நீட் தேர்வு இன்னொரு உயிரை பலிவாங்கியிருக்கிறது - டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் சாடல்
மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது.
மதுரை: நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது மரணத்திற்கு முன்பாக தற்கொலை கடிதம் எழுதியுள்ள மாணவி, உருக்கமாக பேசி வீடியோ, ஆடியோ பதிவு செய்து வைத்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 12, 2020
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ? என்று பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்#SayNoToNEET #BanNEET
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 12, 2020
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு! என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications