பிரதமர் மோடி மதுரைக்கு வருவது அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.. பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
மதுரை: பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவது அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் நாளை பிரதமர் கலந்து கொள்ளவிருக்கும் விழா மேடையில் பாஜக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தர உள்ளார். டெல்லி மாநகரத்தில் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. அனைத்து பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது.,
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி முடிந்த பின்பு அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் மூலம் தமிழகத்திற்கு அரசியல் விழிப்புணர்ச்சி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 4000 கோடி ரூபாய் பாதுகாப்பு உபகரணங்கள் செய்யக்கூடிய நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.,
நாளை மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவின்போது தஞ்சாவூர் திருநெல்வேலி மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார். தமிழனத்தின் துரோகிகளாக இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவார்கள் தயவுசெய்து கறுப்புக்கொடி போராட்டத்தை நீங்கள் கைவிட வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications