மதுரை வழியாக செல்லும் தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்.. பாதை மாறும் ரயில்கள் விவரம்
மதுரை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை-நாகர்கோவில் ரயில் (வ.எண்.16322) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும்.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (வ.எண்.16848) நாளை (புதன்கிழமை) வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, 30-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்கிறது. இதற்காக இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் (வ.எண்.16847) நாளை (புதன்கிழமை), வருகிற 20-ந் தேதி, 23, 27 மற்றும் 30-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-சரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண். 07229) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) வருகிற 19-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மாதா வைஷ்ணவதேவி கத்ரா-நெல்லை வாராந்திர ரயில் (வ.எண்.16788) வருகிற 17-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கோவை-நாகர்கோவில் ரயில் (வ.எண்.16322) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் (வ.எண்.16321) வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவை செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சி-ராமேசுவரம் ரயில் (வ.எண்.16849) நாளை முதல் 18-ந் தேதி வரை, 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை, 25-ந் தேதி, 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மானாமதுரையுடன் நிறுத்தப்படும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16850) நாளை முதல் 18-ந் தேதி வரை, 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை, 25-ந் தேதி, 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ராமேசுவரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும்.
குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 20-ந் தேதி, 24-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16354) வருகிற 26-ந் தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும்.
மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்.07192) நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந் தேதி ஆகிய நாட்களில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
ராமேசுவரம்-சரளப்பள்ளி சிறப்பு ரயில் (வ.எண். 07696) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக சுமார் 10 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு புறப்படும்.
மதுரை- பிகானீர் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) வருகிற 24-ந் தேதி மதுரையில் இருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு புறப்படும்.
மதுரை-கச்சிகுடா வாராந்திர ரயில் (வ.எண்.22716) வருகிற 27-ந் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications