”வராரு.. வராரு.. அழகர் வராரு” பக்தர்கள் புடைசூழ மதுரை வந்தார் கள்ளழகர்.. பக்தர்கள் உற்சாகம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் 4 வது நாளான இன்று கள்ளழகர் மதுரை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது. தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ மதுரை வந்தடைந்தார் கள்ளழகர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளழகர் போல் வேடமிட்ட பக்தர்கள் அழகர் மீது நீரை பீய்ச்சி அடித்து உற்சாகமடைந்தனர்.
மதுரை அழகர் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகரை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வு நடைபெற்றது.

நேறு மாலை 6.15 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். இந்த திருவிழாவானது வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 8 ஆம் தேதி விழா தொடங்கிய முதல் நாளில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து 2வது நாளில் தோளுக்கினியான் பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து நேற்று மாலை, கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் பெருமாள் திருக்கோலத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து இரவு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் என வழியெல்லாம் எழுந்தருளினார். இன்று அதிகாலை 1 மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபம், 2.30 மணிக்கு கடச்சனேந்தல், 5.30 மணிக்கு மாநகர் எல்லைகளில் எதிர்சேவைகள் நடைபெற்றது.
இன்று காலையில் கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ மதுரை வந்தடைந்தார் கள்ளழகர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளழகர் போல் வேடமிட்ட பக்தர்கள் அழகர் மீது நீரை பீய்ச்சி அடித்து உற்சாகமடைந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications