கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறப்பு.. மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின்.. அழகிரி வீட்டிற்கு செல்வாரா?
மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. தென்மாவட்ட மக்களின் முக்கிய அடையாளமாக திகழும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைப்பதற்காக மதுரை வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். கோபாலபுரத்தில் அழகிரியுடன் அன்பாக பேசியுள்ள நிலையில் மதுரையில் அண்ணன் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது . மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் கன்னியாகுமரியில் தொடங்கி தென் மாவட்டங்கள் முழுவதில் இருந்தும் மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

8 தளங்களில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகத்தில், அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடம், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கான மிகப் பெரும் சான்றாதாரக் களஞ்சியமாக இந்த நூலகத்திலுள்ள அரிய நூல்கள் பிரிவு இருக்கும். கடந்த 1918ஆம் ஆண்டில்வெளிவந்த ஜஸ்டிஸ் ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட இதழ்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 1824ஆம் ஆண்டில் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு, லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நாளைய தினம் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நூலகத்தில் 1918 இல் வெளிவந்த ஜஸ்டிஸ் ஆங்கில இதழ்களும், திராவிட இயக்க தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட இதழ்களும் இடம்பெற்றுள்ளன. 1824 இல் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும்தான் இடம் பெற்றுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவோர் , பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்த வெளிவந்த தமிழ் , ஆங்கில நூல்கள் அந்தந்த துறைகளில், சிறந்து விளங்கும் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளைய தினம் மதுரைக்கு செல்கிறார். கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நூலக கட்டிடம் அருகிலுள்ள மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழாவிற்கான மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுகவில் மு.க ஸ்டாலின் குடும்பத்திற்கும் மு.க அழகிரி குடும்பத்திற்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. கடந்த வாரம் கோபாலபுரத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மு.க ஸ்டாலின், அழகிரி நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து மு.க அழகிரி மீண்டும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் கூடி வருவதாக தகவல் வெளியானது.
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 2014ஆம் ஆண்டு இதேநாளில் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் முதல் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பின்னரும் கட்சியை அவர் தொடர்ந்து விமர்சிக்கவே திமுகவில் இருந்து 2014 மார்ச் மாதத்தில் நிரந்தரமாகவே நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் வேறு கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல இடங்களில் ஆதரவாளர்களை அழைத்து கூட்டங்களை நடத்தினார் ஆனால் எல்லாம் சில நாட்களிலேயே அடங்கிப்போனது. இந்த நிலையில்தான் தற்போது மு.க ஸ்டாலின் அழகிரி சந்திப்பு தென்மாவட்ட திமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வரும் முதல்வர் மு.க ஸ்டாலின் அண்ணன் அழகிரிக்கு அழைப்பு விடுப்பாரா? அவரது வீட்டிற்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications