86வயது வத்தல் வியாபாரி ராஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! அப்படி என்ன செய்தார்?
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 86 வயது முதியவர் ராஜேந்திரனை நேரில் அழைத்துப் பாராட்டி அவரைக் கௌரவித்துள்ளார். உழைப்பால் உயர்ந்து, கல்வி வள்ளலாக மாறியிருக்கும் ராஜேந்திரனை மனதாரப் பாராட்டி வாழ்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை தத்தநேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற 86 வயது முதியவர், 'திருப்பதி விலாஸ்' என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
விருதுநகரை பூர்வீகமாக கொண்ட ராஜேந்திரன், 1951ஆம் ஆண்டில் வெறும் 300 ரூபாயுடன் மதுரைக்கு வந்து, அரிசி, காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். பின்னர், அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளார். இப்போது 40 ஊழியர்கள் பணியாற்றும் தொழிலுக்கு அதிபராக இருக்கும் ராஜேந்திரன், கல்விப் பணிக்காக கைநிறைய அள்ளிக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், மதுரையில் பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை இன்று நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு கருணாநிதியின் திருவுருவச் சிலையை வழங்கி சிறப்பித்துப் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதற்காகவும் பாராட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் திரு. ராஜேந்திரன் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அழைத்து சிறப்பித்து, மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட… pic.twitter.com/0J0uibggVr
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 17, 2023
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications