ரூ.8,500 கோடி.. வேகத்தில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. 75 நாளில் விரிவான திட்ட அறிக்கை! குட்நியூஸ்
மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளது. அதன்படி விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதன்மூலம் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் முக்கிய நகரங்களில் விரைவாக பயணம் செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மதுரையில் ரூ.8,500 கோடி திட்டம்
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இதுபற்றி தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‛‛கோயம்புத்தூரில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரையில் ஒத்தக்கடை-திருமங்கலத்தை இணைக்கும் வகையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்'' என தெரிவித்து இருந்தார்.

75 நாளில் விரிவான திட்ட அறிக்கை
இந்நிலையில் தான் தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வழங்கியது. இந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அடுத்தக்கட்டமாக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?
அதன்படி விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கான ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ஸ்ட் என்ஜினீயரிங் அன்ட் கன்சல்ட்டன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரித்து வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்டமாக மண் பரிசோதனை, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்.

எத்தனை கிலோமீட்டருக்கு திட்டம்?
மதுரையை பொறுத்தமட்டில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 29 கிலோமீட்டர் தொலைவுக்கு 17 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் சாத்தியக்கூறு அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றிருந்ததோடு, வைகை ஆறு மற்றும் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் சுரங்க பாதை அமைக்கவும் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

ஸ்டேஷன்கள் எங்கெங்கு?
மேலும் ஒத்தக்கடை, மதுரை உயர்நீதிமன்றம், புதூர், சிம்மக்கல், மதுரை சந்திப்பு மெட்ரோ, பசுமலை, திருநகர், தோப்பூர், கப்பலூர், திருமங்கலம் ஆகிய 10 முக்கிய இடங்களில் மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்கவும் மொத்தம் 17 ஸ்டேஷன்கள் கட்டமைக்கலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும் கூட விரிவான திட்ட அறிக்கை தான் திட்டத்துக்கு முக்கியமானதாகும். இதனால் இந்த அறிக்கையில் இடம்பெறும் தகவலின் அடிப்படையில் தான் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications