ஆரம்பித்த பதற்றம்.. மதுரைக்கு எடப்பாடி பழனிச்சாமி வரக்கூடாது.. தேவரினத்திற்கு துரோகம் என போஸ்டர்கள்
மதுரை: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
முக்குலத்தோர் தேசியக் கழகம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ''தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே'' என எடப்பாடி பழனிசாமியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்றொரு அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி என விமர்சிக்கப்பட்டுள்ளன.

அதிமுக மாநாடுக்கு இன்னும் முழுமையாக 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே எதிர்ப்பாளர்களை சரிகட்டும் வேலைகளை ஆர்.பி.உதயகுமார் கையில் எடுத்துள்ளார்.
மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை தரும் போது எந்தவித சலசலப்பும் ஏற்படக் கூடாது என்பது ஆர்.பி.உதயகுமாருக்கும், செல்லூர் ராஜூவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இன்ஸ்டரக்ஷன் ஆகும். இதனால் அவர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அகற்றும் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல மதுரை அதிமுக மாநாடுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும் கூட மாநாடு நடைபெறும் மதுரை புறநகர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications