நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு!
மதுரை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் தேசியக் கீதம் பாடப்படும் என அறிவித்துவிட்டு அதைப்பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால், தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தி விட்டு தேசியக்கீதம் பாடினர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக பாடப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன் ஆளும் திமுக அரசின் கொள்கைகளையும் மறைமுகமாக ஆளுநர் ஆர்என் ரவி அவ்வப்போது பேசுவதும் அதற்கு ஆளும் திமுகவும் பதிலடி கொடுப்பதும் என அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி டிடி தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் "தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு 'திராவிட நல் திருநாடு' என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக விமர்சனம் எழுந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநருக்கு தமிழ்த்தாய் பாடல் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறிய டிடி தமிழ் தொலைக்காட்சி, இது தொடர்பாக மன்னிப்பு கோரியது.
இதையடுத்து இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், நேற்று ஆளுநர் ரவி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டு பின்னர் தேசிய கீதம் பாடிய பிறகு முழுமையாக பாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். ஆளுநர் ரவி பேசும் முன்பாக அதாவது, நிகழ்ச்சி தொடங்கும் போது, முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
ஆனால் இதை சரியாக கவனிக்காத மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இதைக்கவனித்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், 'தேசிய கீதம்... தேசிய கீதம்...' என சத்தம் எழுப்பினர். உடனே சுதாரித்த மாணவிகள், தமிழ்த்தாய் பாடுவதை நிறுத்திவிட்டு, தேசிய கீதம் பாடினர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் முறையாக பாடப்பட்டது. ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications