தீபாவளிக்கு வரும் குட் நியூஸ்? தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஐ பெரியசாமி முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கூட்டுறவுச் சங்கங்களில் 40 கிராமுக்கு குறைவாக அடகு வைத்தவர்களுக்கான தங்க நகைக்கடனைத் தள்ளுபடி செய்வது குறித்த அரசாணை தயாராக உள்ளது என்று தெரிவித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Cooperatives Minister I. Periyasamy about gold jewelery loans waiver

அப்போது அவரிடம் கூட்டுறவுச் சங்க நகைக் கடன் தள்ளுபடி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கூட்டுறவுச் சங்கங்களில் 40 கிராமுக்குக் குறைவாக அடகு வைத்தவர்களுக்கான தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக உள்ளது. இந்த வாரம் வெளிவந்து விடும். அதைத்தொடர்ந்து நகை உரிமையாளர்களிடம் கொடுப்பதற்குத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

தொடர்ந்து புதுச்சேரி அரசின் தீபாவளி அறிவிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தீபாவளியை முன்னிட்டு நியாய விலை கடை ஊழியர்கள் அனைவரும் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

தமிழகத்தில் பொங்கலுக்குப் பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். இதுகுறித்து தமிழக முதல்வரும் உணவு துறை அமைச்சரும் ஆலோசித்து முடிவு செய்வார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+