ஏய் கொரோனா.. மக்களை டர்ர்ர் ஆக்குகிறாயா?.. "யாமிருக்க பயமேன்".. மதுரையை கலக்கும் மாஸ் போஸ்டர்!

மதுரையில் விழிப்புணர்வு பிரச்சார போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஏய், கொரோனா, என் மக்களையே டர்ர்ர் ஆக்குகிறாயா? என்ற காமெடி வாசகங்களுடன் போஸ்டர் ஒன்று மதுரை மாவட்டத்தை கலக்கி வருகிறது!

கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 coronavirus awarness posters in madurai

விழிப்புணர்வு என்பது பொதுவாக அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் அல்லது இயக்கம், சங்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்த்தப்படும்.. ஆனால் கொரோனாவை பொறுத்தவரை தனிநபர்களே களம் இறங்கிவிட்டனர்.. இது உயிர் பிரச்சனை என்பதால் முக்கியத்துவம் தந்து பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மதுரையில் ஒரு வித்தியாசமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கொரோனா குறித்து மிக சீரியஸாகவே அட்வைஸ்களை கேட்டு வரும் நிலையில், மதுரைக்காரர்கள் தங்களுக்கே உரிய பாணியில் மெசேஜ் சொல்லி போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்... தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கடைப்பிடித்தால் கொரோனா வராது என்பதுதான் கான்செப்ட்!

ஆனால் இதில் நடிகர் வடிவேலுவை நாரதர் போன்று சித்தரித்தள்ளனர்.. முருக பெருமான் கரோனா வைரஸை வைத்து விளையாடி கொண்டிருக்கிறார்... அப்போது நாரதர் வடிவேலு அங்கே வருகிறார்.

நாரதர்: ஏய், கொரோனா, என் மக்களையே டர்ர்ர் ஆக்குகிறாயா?

முருகன்: நாரதரே வேலோடு விளையாடியே ஃபோர் அடித்து விட்டது... நான் விளையாட வேறு ஏதேனும் புதிதாய் கொண்டு வாருங்களேன்.

நாரதர்: முருகா, பூமியில் கொரோனா வைரஸ் எனும் கிருமி மனிதர்களை அச்சுறுத்தி கொண்டு இருந்தது. அதனையே பிடித்து கொண்டு வந்துள்ளேன். அதனிடம் காட்டு உனது திருவிளையாடலை"

அசரீரி: நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகின் எட்டுத்திக்கிற்கும் கற்பித்த தமிழ் சமூகமே, அதனையே பின்பற்று, எதற்கும் அஞ்சாதே! நான் இருக்கிறேன் உன்னோடு... யாமிருக்க பயமேன்"என்று இப்படி அதில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஒரு சீரியஸான விஷயத்தைகூட எளிமையாக, பாமர மக்களுக்கு புரியும்படியாக, புகுத்த முயன்றுள்ளது பாராட்டுக்குரியது.. இந்த போஸ்டரை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் போட்டோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்... நாரதராக நடிகர் வடிவேலு இருந்தாலும், கரோனா வைரஸ் கையில் வைத்துள்ள முருகர்தான் அல்ட்டிமேட்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+