மதுரை மாவட்டம் கிராமப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகளுக்கு அனுமதி
மதுரை: லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் கிராமப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுமானப் பணிகளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. ஆனால் ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், கிராமப் புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை துறை கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுமானப் பணிகளை மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஏற்கனவே நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications