2 மாசத்துக்கு ஒரு வாட்டிதான் வருவார் கணவர்.. மனைவியுடன் தகராறு.. ஆளுக்கு ஒரு பக்கம் தீக்குளிப்பு!

குடும்ப தகராறில் தம்பதி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2 மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவாராம் கணவர்.. தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில் ஆளுக்கு ஒரு பக்கம் மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி கொண்டு தீயையும் வைத்து கொண்டு கருகி விட்டனர்.. இந்த சம்பவம் உசிலம்பட்டியை அதிர செய்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம்... 38 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கனி.. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

 couple committed suicide due to family issue near madurai

ஜெயராம் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார்... அதனால் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்று வருவது வழக்கம்.. இதன்காரணமாகவே 2 மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவாராம்.. ஒரு வாரம் தங்குவாராம்.. மறுபடியும் லாரி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாராம்.

இப்படித்தான் ஒருநாள் ஜெயராம் வெளிமாநிலத்தில் லாரி ஓட்டி கொண்டிருந்தார்.. அப்போது திடீரென அந்த லாரி ரிப்பேர் ஆகிவிட்டது.. லாக்டவுன் சமயத்தில் அங்கு மெக்கானிக் ஷாப்-களும் இல்லை.. கையில் அந்த அளவுக்கு காசும் இல்லை.. அதனால், லாரியை அங்கேயே விட்டுவிட்டு, பணம் ஏற்பாடு செய்வதற்காக ஊருக்கு வந்துள்ளார்.

ஆனால் வீட்டில் வந்தால் அதற்கு மேல் வறுமை வாட்டியது.. இதனால் மனவேதனை அடைந்த ஜெயராம், நண்பர்களுடன் வெளியே சென்று தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அப்போது தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் 2 பேருமே கோபத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தங்களுக்கு தாங்களே தீயையும் வைத்து கொண்டனர்.. உடம்பெல்லாம் தீப்பற்றி எரிய அலறி துடித்தனர்.. இவர்கள் மீது பிடித்த தீயானது, அங்கிருந்த பிள்ளைகள் மீதும் பற்றி கொண்டது.. இதனால் குடும்பமே தீயில் சிக்கி அலறியது.

அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.. 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. ஆனால், தம்பதி 2 பேருமே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. பிள்ளைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+