திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி விழா.. தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு! விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த 21ம் சந்தனக்கூடு விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, வரும் 6ம் தேதி சந்தனக்கூடு, கந்தூரி விழா நடைபெறுகிறது. இந்நிலையில் கந்தூரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்காமல், விசாரணையை ஜன.2ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.
அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் தமிழக அரசு இதற்கு அனுமதிக்கவில்லை. இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில் கந்தூரி நடத்துவது குறித்து விவாதங்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications